Specials Stories

World Laughter Day 2024

அவசரமா ஓடிட்டு இருக்க இந்த காலத்துல, ஒருத்தவங்க கிட்ட நின்னு டைம் என்னனு கேக்க டைம் இல்ல. அட ஆமாங்க! எதையோ நோக்கி நம்ம எல்லாரும் ஓடிட்டு தான் இருக்கோம். மத்தவங்க கிட்ட நலம் விசாரிக்குறத விடுங்க. நம்ம வீட்டுலயே ஒருத்தவங்க கிட்ட ஒருத்தவங்க ஒன்னா உக்காந்து பேசி சிரிச்சு சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சுல்ல!

லீவு கிடைச்சா தான் ஊருக்கு போறது, வீட்ல கொஞ்சம் நேரமாச்சு டைம் ஸ்பென்ட் பண்ணுறது, பிரண்ட்ஸ் கூட வெளிய போறதுனு எல்லாமே. இதுக்கு நடுவுல எப்போவுமே நம்ம மைண்டுல ஏதோ ஒரு யோசனை. வேலைய பத்தி, நம்ம பொறுப்புகள பத்தி, ஏதாச்சு பிரச்னைகளை பத்தி, இப்டி சொல்லிட்டே போகலாம். அப்பறம் ஒரு நாள் எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குப்பானு டாக்டர் கிட்ட போறது.

ம்ம்ம்… செல்ப்-மெடிகேஷன் இருக்கக்கூடாதுனு சொல்லுறது கரெக்டுதான். ஆனா இந்த ஒரு மெடிசன எந்த ஒரு பிரிஸ்கிரிப்சனும் இல்லாம நீங்களே எடுத்துக்கலாம்! ஹே, சிரி! அட உங்க கெட்ஜெட் கிட்ட பேச சொல்லலங்க. உங்கள சிரிக்க சொன்னேன். சிரிப்ப தவற ஒரு நல்ல மருந்து இருக்குமா? சிரிக்கிறதுலாம் மனுஷங்களுக்கு கிடைச்ச ஒரு வரம். இதுலாம் தெரிஞ்ச விஷயம் தானேனு நீங்க யோசிக்கலாம். அப்படி இருந்தா, ஏன் “Laughing Therapy” னு ஒன்ன தேடி நெறைய பேரு போறாங்க? அது தப்புன்னு நான் சொல்லல. ஆனா நாம சிரிக்க மறக்குறோம்னு சொல்லுறேன்.

“A day without laughter is a day wasted” – சார்லி சாப்லின் ஒருதடவை சொல்லிருக்குறாரு. அதனால… சிரிக்குறதுக்கு எந்த ஒரு சின்ன, ஸில்லி ஆன மொமண்ட் கிடைச்சாலும் அத மிஸ் பண்ணாம சிரிச்சுருங்க. உங்களுக்கு பிடிச்ச காமெடி வீடியோஸ், காமிக்ஸ் கதைககள், எப்போவோ உங்க நண்பர்கள் கூட டீ குடிக்குற கேப்-ல நீங்க போட்ட கடி ஜோக், டைமிங்க்கு யாரோ யாருக்கோ குடுத்த கௌண்ட்டர்ஸ், சின்ன வயசுல நீங்க பண்ணுன விஷயங்கள், நீங்க பண்ணுன்ன சில ஸில்லி மிஸ்டேக்ஸ்ன்னு சிரிக்க காரணங்கள் கடல் அளவுக்கு கொட்டி இருக்கு.

ஹா! முக்கியமான ஒரு விஷயம். உங்களுக்கு சோசியல் மீடியால, தான் சிரிச்சது மட்டும் இல்லாம, ஒரு 5,6 பேர்த்துக்கும் சேர்த்து ரீலிஸ் அனுப்புற உங்க Friends-க்கு மொதல்ல ஒரு கும்புட போடுங்க. அதுல ஒன்னோ ரெண்டோ கண்டிப்பா உங்கள அறியாமலே சிரிக்க வச்சுருக்கும். அதயெல்லாம் கவனிக்காம இந்த Write -up-ல இருக்க மிஸ்டேக்ஸ கண்டுபிடிக்கலாம்னு ட்ரை பண்ணாதீங்க. போய் அந்த ரீலிஸ்க்குலா ஹாஹா ரியாக்ட் பண்ணுங்க. முடிஞ்சா மத்தவங்களையும் சிரிக்க வைங்க. Happy World Laughter Day!

Article By RJ Adhithya

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.