இயற்கை கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அந்த அப்பாற்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்களுள் ஒன்று தான் நம்முடைய பெருங்கடல்கள். அவை மிகவும் ஆச்சரியமானது மட்டுமல்ல அமானுஷ்யமானது.
உலகில் உள்ள உயிர்களை தோற்றுவிச்சதுல கடலுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கு. உலகத்தோட முதல் ஒரு செல் உயிரி உருவானதே கடலுக்கு அடில தான். விண்வெளில கூட பல ஒளியாண்டு தூரத்துக்கு மனுஷன் பயணம் செஞ்சுட்டான். ஆனா கடலுக்கு அடில என்ன ஒளிஞ்சு இருக்குனு இன்னும் மனுசங்களால கண்டு பிடிக்க முடியல.
ஒரு சின்ன கதை சொல்றேன் கேளுங்க, நா சின்னவயசுல இருக்கும்போது எங்க வீட்ல இருந்து ஒரு டூர் போனோம், அப்போ ஒரு கடற்கரைக்கு கூட்டிட்டு போறாங்க. அங்க நான் ரொம்ப நேரமா கடல பாக்கறேன். என்ன தோணுச்சுனு தெரியல!
எனக்கு பக்கத்துல இருந்த கல்ல தூக்கி கடலுக்குள்ள போட்டேன், அப்போ எங்க அப்பா சொன்னாரு ” கடல கோவப் படுத்தக் கூடாது” அப்டினு. அப்போ புரியல ஆனா இப்போ புரியுதுனு நெனைக்கிறேன். மழை, உணவு, பயணம், மருந்து, மின்சாரம்னு நமக்கு இயற்கையாவும் செயற்கையாவும் உதவுது கடல்.
இப்டி உதவி மட்டுமே செஞ்சுட்டு இருக்கிற கடலுக்கு நம்ம என்ன செய்யறோம்? பேப்பர்ல இருந்து பிளாஸ்டிக் வரைக்கும் நம்ம கழிவுகள் எல்லாம் கடலுக்கு தான் போகுது. நம்மளால குடுக்க முடியலனாலும் பரவாயில்ல கெடுக்க வேண்டாம்.