சர்வதேச சிட்டுக்குருவி நாள் (Sparrow Day) ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ஆம் தேதி கொண்டாடப்படுது. நம்ம சின்ன வயசுல காலை எழுந்ததும் அலாரம் வேணாம் – சிட்டுக்குருவி கீச்சு கீச்சுனு சத்தம்தான் நம்மை எழுப்பும் 😄ஜன்னல் ஓரம் கூடுகட்டி, அரிசி தானியம் தூவினா கூட்டமா வந்து சாப்பிடும்; சில சமயம் நாம அருகே போனா பறந்துட்டு போகும், மறுபடியும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் வந்து நம்மை பார்த்து “இன்னும் கொஞ்சம் வைய்யா!”ன்னு கேக்குற மாதிரி இருக்கும் அந்த cute moments எல்லாம் இப்போ ரொம்ப மிஸ்ஸாகுது. இந்த சின்ன பறவைகள் சும்மா க்யூட் தான் இல்ல, பூச்சிகளை சாப்பிட்டு பயிர்களை காப்பாத்தும், விதைகளை பரப்பி இயற்கையை balanceல வைக்கும். ஆனா இப்போ பெரிய பெரிய buildings, மரங்கள் குறைவு, பழைய வீடுகள் இல்லாம போனது, pollution, mobile tower radiation எல்லாம் சேர்ந்து அவங்களுக்கு stay பண்ண இடமே இல்லாம ஆக்கிடுச்சு. அதனால தான் இந்த நாளை celebrate பண்ணி “ஏய், சிட்டுக்குருவியை மறந்துடாதீங்க!”ன்னு remind பண்ணுறாங்க. நாம என்ன பண்ணலாம்? வீட்டின் வெளியே ஒரு குட்டி தண்ணீர் கிண்ணம் வைக்கலாம், கொஞ்சம் அரிசி தூவலாம், சின்ன nest box வைக்கலாம், மரங்கள் நடலாம், pesticides குறைக்கலாம் – இவ்ளோ பண்ணாலே அவங்க திரும்ப நம்ம வீட்டு guest ஆக வர ஆரம்பிச்சிடுவாங்க. சின்ன பறவைதான் ஆனா நம்ம childhood memoriesக்கும், நம்ம natureக்கும் ரொம்ப special… அதனால “சிட்டுக்குருவி வந்தா வீட்டில சந்தோஷம் வந்தது”ன்னு சொல்லிக்கிட்டு அவங்களை காப்போம்!
Article By – RJ Jo

