Specials Stories Trending

காந்த குரலரசன் யுவன் !!!!

யுவன் குரல் உண்மையில் யுவன்களை இழுக்கும் குரல்.

ஒரு குரல் வழி வரும் பாடல் என்ன செஞ்சு விடும் என்று ஆரம்பித்து, என்னவெல்லாமோ செய்து விடுகிறது அது யுவனின் குரல்….

வெண்ணிற இரவுகள் என தொண்டையின் ஒரு சிறு பகுதியில் இருந்து பிசிறடித்தாற் போல் வரும் அந்த பாடல் உணமையில் நம் கருமை இரவுகளை வெண்மையாக்கும் எப்போது கேட்டாலும்….

யுவனின் ஸ்பெஷலே…அவர் பாடிய பாடலை எந்த உணர்வுக்குள் கேட்க ஆரம்பிக்கிறமோ அதே உணர்வுடன் அந்த பாடலை முழுதும் கடக்கலாம்.

தொண்டையின் முன் பகுதியில் வரும் ஒரு ஈர்ப்பான குரல் அது, அதில் காதல் வலிகள் கொண்ட போகாதே ,,,போகாதே, மற்றும் ஏதோ ஓன்று என்னை தாக்க மட்டுமல்ல….

அந்த குரலில் என் காதல் சொல்ல நேரமில்லை…என கேட்கும் யாருடைய காதுகளை மட்டுமில்ல கால்களையும் துள்ள வைக்கும்.

அதையும் தாண்டி ரஹ்மான் சார் இசையில் மரியானில், ’கொம்பன் சுறா…வேட்டையாடும் கடல் ராசா நான் என ஒரு ஓப்பனிங் பெப்பி நம்பரா நமக்கு கொடுத்திருப்பார்…

எந்த வகையிலும் கேட்கும் இசை ரசிகர்களை ஏமாத்திடாத குரல்…

முக்கியமா நான் இந்த் இடத்துல சொல்லணும்..

யுவனின் குரல்களை நான் எப்போதும் வேலை செய்து கொண்டு ஏனோ தானோ என்று கேட்க மாட்டேன்….அது எப்படி உணர்வுகளுக்குள் ஊடுருவுதோ அதே போல் என் உடல் மொழிகளும் அந்த பாடல்களுக்கு ஏற்றாற்போல் மனம் லயித்து செல்லும். ஆதாலால் ஓர் இடம், ஓர் நேரம் என ஒதுக்கிதான் கேட்பேன்

அவர் பாடல் போலே ’பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை’ அவர் பாடல்களுக்குள் என்றும் பொய் தெரிந்ததில்லை….

யுவனின் குரல்

காதலர்களை அழகான காதலர்களாக்கும்….காதலை அழகான காதலாக்கும் இந்த பிறந்த நாளில் இன்னும் பல இசை சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.

Article by Subbu

About the author

alex lew