என்னதான் நம்ம தமிழ் படங்கள் தியேட்டர்களை எல்லாம் Housefull-ஆ வச்சிருந்தாலும் மற்ற மொழி திரைப்படங்கள நமக்கு ஏத்த மாதிரி மொழிமாற்றம் செஞ்சு ஒரு பக்கம் ரீலீஸ் பண்ணிட்டு தான் இருக்கோம். அப்டி 2022-ல வெளிவந்து நம்மள Wow னு சொல்ல வச்ச 3 திரைப்படங்கள் பத்தி இப்போ பார்ப்போம்.
1. ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி May I Come In-னு நம்ம ராக்கி பாய் வந்தாரு. Yes, KGF-2 திரைப்படம் தான், இயக்குனர் பிரஷாந்த் நீல் இந்த படத்தை முதல்ல கன்னட மொழில எடுத்து அதுக்கப்புறம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகள்ல மொழிமாற்றம் செஞ்சு ரிலீஸ் பண்ணாரு.

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோர் அவங்களோட சிறப்பான நடிப்பை இந்த படத்துல ரொம்பவே வெளிப்படுத்தியிருந்தாங்க. இந்த படம் பட்ஜெட் என்னமோ 100 கோடி தான், ஆனா இந்த படத்தோட கலக்ஷன் சுமார் 1200 கோடிய தாண்டி Box Office-ல ஒரு சாதனையே படைச்சுது.
2. அடுத்ததா மார்ச் மாதம் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆன RRR. நம்ம பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்க ராம் சரண், ஜூனியர் NTR நடிப்புல உருவான இந்த படத்துல Pan India நடிகர்கள் நடிச்சிருந்தாங்க. தமிழ்ல இருந்து சமுத்திரக்கனி, இந்தில இருந்து அஜய் தேவ்கன், அலியா பட் தெலுங்குல ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்னு இந்தியாவின் அனைத்து தரப்புல இருந்தும் பலர் இந்த படத்துல பணியாற்றியிருக்காங்க.

இந்த படத்துக்கு MM கீரவாணி அவர்கள் மியூசிக் கம்போஸ் பண்ணிருந்தாங்க. 550 கோடி பட்ஜெட்ல பிரம்மாண்டமா எடுக்கப்பட்ட இந்த படமும் 1200 கோடி கடந்து Box Office சாதனை பண்ணிருக்கு.
3. அடுத்ததா இப்போ வரைக்கும் இந்த படத்தை பாத்துட்டு இந்த படத்துல வர Woooow Sound-க்கு நாம அடிமையாகி போய்ட்டோம். ஆமா, கன்னட மொழில வெளிவந்த காந்தாரா திரைப்படம் தான். ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடிச்ச ஒரு அற்புதமான திரைப்படம் தான் காந்தாரா. இந்த படம் கன்னட மொழில நல்லா வந்தத தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இந்த படத்த மற்ற மொழிகளுக்கு ஏற்ப மொழிமாற்றம் செஞ்சு ரிலீஸ் பண்ணாரு.
இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையிடப்பட்டுச்சு. இந்த படம் வெறும் 16 கோடி பட்ஜெட்ல உருவாக்கப்பட்டது, 400 கோடிக்கு மேல வசூல் செஞ்சுருக்கு. கன்னட மொழில KGF படம் படைச்ச வசூல் சாதனைய இந்த படம் முறியடிச்சுடுச்சு. காந்தாரா படம் கன்னடத்துல மட்டும் இல்ல, மற்ற மொழிகளிலும் பெரிய Hit தான்.
நம்ம தமிழ் சினிமா மட்டும் இல்லங்க, நமக்கு புடிச்ச எந்த சினிமாக்கும் நாம மதிப்பு கொடுப்போம்னு தெளிவா தெரியுதுல்ல. நான் சொன்ன டப்பிங் படங்கள் மட்டுமில்லாம 2022-ல பல திரைப்படங்கள் நம்ம மனசுக்கு புடிச்ச மாதிரி ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. உண்மைய சொல்லணும்னா என்ன மாதிரி சினிமா பிரியர்களுக்கு 2022 ஒரு வரப்பிரசாதம் தான். இதே போல உங்க Favorite Movies என்னனு கமெண்ட் பண்ணுங்க.