Specials • Stories

Sweet singer Sujatha Mohan

happy birthday Sujatha Mohan
happy birthday Sujatha Mohan

ஆமாங்க இவங்களுக்கும், இவங்க Voice-க்கும்  வயசே ஆகாது போல…. போக போக இளமையும் இனிமையும் கூடிட்டே போகுது that is age in reverse gear- னு சொல்லலாம். இவங்க மார்ச் 31, 1963 கொச்சி கேரளம்-ல பொறந்தவங்க, her Pleasant smile-க்கு என்ன மாறியே நீங்களும் fan-ஆ இருக்க அதிக chance-இருக்கு because அவங்க signature-ஏ அதுதான் and  இவங்களே ரோஜா பூ மாதிரி தான் இருப்பாங்க அதோட இவங்க பாட்டு உங்கமேல பூ மழை பெய்ய வெக்கிற அளவுக்கு அவ்ளோ சுகமா இருக்கும்.இவங்க  கிட்டத்தட்ட  பத்தாயிரத்துக்கும் மேல பாட்டு பாடி இருக்காங்க அதுவும் various languages-ல…இவங்கள பத்தி சொல்ல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு before that நான் கொடுக்கிற  அத்தனை  hype-க்கும்  சொந்தக்காரங்க யாருன்னா

 The one and only Singer  “சுஜாதா மோகன்”.

Yes நான் உங்களுக்கு detailed-ஆ explain பண்றேன்.அதாவது அது பொண்ணுங்க எல்லாம் வெளியில போய் பாட கூடாது அதெல்லாம் set ஆகாதுன்னு society சொன்ன காலம் but அத்தனை barriers தாண்டி இன்னிக்கு successful singer-ஆ  பல பெண்களுக்கு inspiration-ஆ இருக்காங்க.Music-மேல இருந்த ஆர்வத்தால சின்ன வயசுலிருந்தே stage shows-க்கு போவாங்கலாம் கிட்டத்தட்ட 1000  stage shows KJ யேசுதாஸ் அவர்களோட பாடி இருக்காங்க .Then 1975-ல தன்னோட முதல் பாட்ட  Tourist Bungalow-ங்கிற படத்துக்கு  மலையாளத்துல பாடி இருக்காங்க. அதுக்கு அப்புறம் தான் தமிழ் cinema-ல பாட வாய்ப்பு கிடைச்சிது. 1977-ல இளையராஜா Music-ல கவிக்குயில் படத்துல காதல் ஓவியம்-ங்கிற  பாட்ட பாடினாங்க.Again 1977 இளையராஜா Music-ல காயத்ரி படத்துல காலைப்பணியில்-ங்கிற  பாட்டு , ஜானி  படத்துலயும் பாடினாங்க.

After that temporary-ஆ Music quit பண்ணினாலும் அப்புறம் husband oda support-ல after marriage திரும்பவும் சினிமால பாட ஆரம்பிச்சாங்க. 60-க்கும் மேற்பட்ட பாடல்கள்  முன்னாடி பாடி இருந்தாலும் ஏ.ஆர் ரகுமான் மியூசிக்ல வந்த காதல் ரோஜாவே,புது வெள்ளை மழை இதெல்லாம் இவங்கள எல்லாரும் தேடி தேடி ரசிக்கும்படி பண்ணுச்சு. அப்போ ஆரம்பிச்சு Aathangarai Marame ( Kizhakku Cheemayile),Rukku Rukku (Avvai Shanmugi), Mellisaye(Mr. Romeo),Poove Nee Aadava (Kalki),Alangatti Mazhai(Thenali),Adhisaya Thirumanam (Paarthale Paravasam),Aasai Aasai (Dhool),Azhagooril Poothavale – (Thirumalai),Annanoda Paattu(Chandramukhi),Katrin Mozhiye(Mozhi)Vaadi Vambu Pennae(Thottal Poo Malarum),Attrai Thingal (Siva Manasula Sakthi) இப்படி இவங்க பாடின பல பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சு இன்னுமும் அழகூரில் பூத்தவளே பாட்டு கேட்டா நான் கொஞ்ச நேரம் நின்னு full-ஆ கேட்டுட்டு தான் வருவேன்.அந்த அளவுக்கு  ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரியும்  என்ன மாதிரியே பல பேருக்கு,play list-ல இவங்களோட பாட்டு கண்டிப்பா இருக்கும்னு…. அதுவும் இப்போ வெயில் அடிக்குது still சொட்ட சொட்ட நனையுது  தாஜ்மஹால் பாட்டு whole  weather-ஏ சில்லுனு  மாத்திடும் கேக்கவே சும்மா குளுகுளுன்னு பாடி இருப்பாங்க.

And சினிமாக்கு வரதுக்கு முன்னாடியும் வந்ததுக்கு அப்புறமும்

Personal-ஆ challenges நிறைய face பண்ணினாலும் இவங்களோட hardwork  and dedication-ஆல தமிழ் சினிமால இன்னமும் முன்னணி பாடகியா பெருமையோட வலம் வராங்க Sweet singer Sujatha Mohan…. இது எப்போதுமே தொடரனும்.. இளமையாவும் இனிமையாவும் இவங்களோட பாட்ட நம்மளோட next generationsம்  கேட்டு ரசிக்கணும் “Sweet singer Sujatha Mohan க்கு சூரியன் FMன் இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article by – RJ Monika

About the author

Sakthi Harinath