Specials Stories

Arunima Sinha: விழுந்த இடத்திலிருந்து Everest வரை

Arunima Sinha
Arunima Sinha

Arunima Sinha – “விழுவது தோல்வியல்ல… விழுந்த பிறகு எழாமல் இருப்பதுதான் தோல்வி.”

ஒரு ரயில் பாதை…
அதற்கு நடுவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்…
அந்தப் பெண்ணுக்கு அப்போது தெரியாது — அவருடைய வாழ்க்கை இங்கே முடிவதில்லை… இங்கிருந்துதான் ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமாகப் போகிறது என்று.

அந்தப் பெண்ணின் பெயர் Arunima Sinha.

2011-ல், தேசிய அளவில் volleyball விளையாடிய அருணிமா அவர்கள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கொள்ளையர்களால் ரயிலில் இருந்து தள்ளப்பட்டார். அடுத்த ரயில் மோதியதில் அவருடைய இடது காலை இழந்தார்.

ஒரு national-level sportsperson-க்கு…
கால் போய்விட்டது.

பலரும் அவருடைய கனவுகள் முடிந்துவிட்டதாக நினைத்தார்கள்.

ஆனால் hospital bed-ல் இருந்தபோதே அருணிமா அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்:

“நான் Mount Everest ஏறப் போகிறேன்.”

ஒரு காலையே இழந்த ஒருவர் எப்படி உலகின் உயரமான மலையை ஏற முடியும்?

பலரும் முடியாது என்றார்கள்.
ஆனால் அவர் நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை.

Prosthetic leg பொருத்தப்பட்ட பிறகு, basic mountaineering training எடுத்தார். Everest ஏறிய Bachendri Pal அவருக்கு பயிற்சி அளித்தார்.

அதற்குப் பிறகு ஆரம்பித்தது உண்மையான போராட்டம்.

உடல் வலி, பயம், சந்தேகம், “முடியாது” என்ற குரல்கள் — எல்லாவற்றையும் கடந்து, 2013 மே 21-ம் தேதி அருணிமா அவர்கள் Mount Everest உச்சியை அடைந்தார்கள்.

உலகின் முதல் பெண் amputee ஆக Mount Everest ஏறியவர் என்ற சாதனையையும் படைத்தார்கள்.

ஒரு காலத்தில்…

அவர் தண்டவாளத்தில் விழுந்தார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…

அதே பெண் உலகத்தின் உச்சியில் நின்றார்.

இதுதான் Never Give Up என்பதன் அர்த்தம்.

இன்று World Never Give Up Day.

இந்த நாள் நமக்கு சொல்லும் விஷயம், வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் முயற்சியை கைவிடக்கூடாது என்பதுதான்.

Never Give Up என்றால் விழாமல் இருப்பது அல்ல.

விழுந்தாலும் எழுவது.
தோற்றாலும் மீண்டும் முயற்சி செய்வது.
முடியாது என்று தோன்றினாலும் இன்னொரு அடியை எடுத்து வைப்பது.

நம்முடைய வாழ்க்கையிலும் சிறிய தோல்விகள் வரும். அப்போது மனம், “விட்டுடலாம்” என்று சொல்லும்.

அந்த நேரத்தில் அருணிமா சின்ஹா அவர்களின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.

ஒரு காலத்தில் தண்டவாளத்தில் கிடந்தவர்…
பின்னர் அதே உலகத்தின் உயரமான சிகரத்தில் நின்றார்கள்.

நம்முடைய Everest என்னவென்று நமக்கே தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் இன்னும் ஒரு step…
இன்னும் ஒரு முயற்சி…

அதுவே நம்மை நம்முடைய உச்சிக்கு கொண்டு செல்லலாம்.

இந்த World Never Give Up Day-ல் நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்:

இன்னுமொரு முறை முயற்சிப்பதில் தவறென்ன?

Article By – RJ NILA

About the author

Sakthi Harinath