Specials Stories

Elephant Day: யானைகள் இல்லன நாம உயிர் வாழ்வது கஷ்டம்

elephant day 2026
elephant day 2026

யானைகள் இல்லன நாம உயிர் வாழ்வது கஷ்டம்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா?

யானைகள் இந்த பூமியில் வாழ்கிற பிரம்மாண்டமான ,கம்பீரமான விலங்கு .அதோட உருவம் என்னதான் பெருசா இருந்தாலும் அதோட குணம் குழந்தை மாதிரி. மனிதர்களைப் போலவே அற்புதமான நினைவாற்றலும் ஆழமான பாசமும் கொண்ட ஒரு அழகான உயிரினம்.

யானைகள் வெறும் விலங்கு மற்றும் அது காடுகள்ல வாழ்ற காட்டோட பொறியாளர் அப்படின்னு சொல்லலாம்

பிரம்மாண்டமாய் இருக்க இந்த யானை ஒவ்வொரு முறை நடக்கும் போதும் நிறைய பாதைகளை காட்டுக்குள்ள உருவாக்குது, இது மற்ற உயிரினங்களுக்கு ஒரு பெரிய வழித்தடமா அமையுது.

கடுமையான கோடை காலத்தில், யானைகள் தங்கள் தந்தங்களால் நிலத்தைத் தோண்டி நீர்நிலைகளை உருவாக்குகின்றன. இந்த நீர்நிலைகள் காட்டில் உள்ள நூற்றுக்கணக்கான பிற சிறிய விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கின்றன.

ஒரு யானை ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து, செரிமானம் அடைந்த சாணத்தின் மூலம் ஆயிரக்கணக்கான விதைகளைப் பரப்புகிறது. புதிய காடுகள் உருவாக யானைகளின் பங்கு மிக முக்கியமானது.

இப்படி இயற்கையை சரியான முறையில பேணி காத்துட்டு இருக்க இந்த விலங்குக்கும் மனிதர்களுக்கும் இந்த நூற்றாண்டுல எக்கச்சக்க முரணை ஏற்பட்டு யானைகள் மூலமாக மனிதர்களுக்கும் மனிதர்கள் மூலமாக யானைகளுக்கும் நிறைய இழப்புகள் ஏற்பட்டு இருக்கு இது எல்லாத்தையும் சரி செஞ்சு யானைகளை நாம் பாதுகாத்தே ஆகணும்.

யானை வாழும் காடுதான் மனிதன் வாழத் தகுதியான பூமி. யானைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் ஒரு விலங்கைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, நமது எதிர்கால நீர் மற்றும் காற்று ஆதாரத்தைப் பாதுகாப்பதாகும்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இந்த தினத்தில் நாம் எல்லாருமே புரிஞ்சுக்க வேண்டிய ஒன்னு, யானைகள் இந்த பூமிக்கு கிடைத்த ஒரு பெரிய வரம் அத என்னைக்குமே நாம பாதுகாக்கணும்.

Article by – RJ Kavin

About the author

Sakthi Harinath