அன்னைக்கு காலைல 7 மணி இருக்கும்.ஒரு கப் தண்ணிய ஊத்தி எங்க அம்மா என்ன எழுப்புனாங்க.எழுந்து எல்லா வேலையும் முடிச்சிட்டு நா வெளிய வந்த மொதல்ல உன் ரூம் கிளீன் பண்ணுனு சொல்லிட்டாங்க.நானும் வேண்டா வெறுப்பா தான் போனே அப்போ நா பார்த்த அந்த ஒன்னு என்னைய குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போயிட்டு… அப்படி என்ன பார்த்தேன்னு யோசிக்கிறீங்களா என்னோட சின்ன வயசு photo தான்.அதுல நா என் தங்கச்சியோட நின்னுட்டு இருந்தேன்.இந்த photo எடுத்த அன்னைக்கு எனக்கும் தங்கச்சிக்கும் சரியான சண்டை .ஒருத்தர ஒருத்தர் மொறச்சிகிட்டோம் அதோட தான் இந்த போட்டோவும் எடுத்தாங்க.. ஆனா அந்த போட்டோவ இன்னைக்கு பார்த்த கோவம் இல்ல சிரிப்பு தான் வருது.அது தான் போட்டோவோட magic.
அப்படிப்பட்ட புகைப்படங்கள் காலம் தாண்டினாலும் நம்ம கண்ண விட்டு நீங்காத நினைவை குடுக்கும்.அது நம்ம வாழ்க்கையில நடந்த ஒரு நொடியை,அப்படியே நிறுத்தி வைக்குற ஒரு சின்ன மாயம்.சந்தோஷமா சிரிச்ச முகம்,கண்ணீர் வந்த அந்த நொடி,நண்பர்களோட சேர்ந்து அடிச்ச லூட்டி,அம்மா கையில சாப்பிட்ட தருணம்…இன்னைக்கு எல்லாமே மாறிப்போயிருக்கலாம்.ஆனா ஒரு போட்டோவைதிரும்பிப் பார்த்தா போதும்…“அடடா… அந்த நாள்!”னு மனசு அப்படியே பின்னாடி போயிடும்.சில போட்டோக்களுக்குகதை சொல்ல வார்த்தையே தேவையில்லை.
அப்பாவோட தோள்ல உட்கார்ந்திருந்தஅந்த சின்ன வயசு போட்டோ இன்னைக்கு நாம பெரியவங்களாநின்னாலும்,அந்த போட்டோவுக்குள்ளநாம இன்னும் அந்த குட்டிப் பிள்ளைதான்.காதலோட எடுத்த ஒரு போட்டோ காதல் முடிஞ்சு போனாலும்,அந்த போட்டோ மட்டும்அந்த நாளோட நினைவை விடாம பிடிச்சிருக்கும்.நண்பர்களோட எடுத்த போட்டோவ பார்த்தா,“டேய்… நம்ம அப்போ இப்படி இருந்தோமா?”னு சிரிப்பு வரும்.சில போட்டோக்களை பார்த்தா சிரிப்பு வரும்.ஸ்கூல் குரூப் போட்டோவ பாக்குறப்ப சொல்லப்பட்ட கதை மட்டுமில்லாம சொல்லப்படாத காதலும் ஞாபகம் வரும்.சில போட்டோக்கள பார்த்தா கண்ணு கலங்கும்,இன்னும் சில போட்டோக்கள் மட்டும் நம்மளையே கொஞ்ச நேரம் மௌனமாக்கிடும். அதுதான் புகைப்படத்தோட பவர்.
கேமரா ஒரு நொடியைக்ளிக் பண்ணுது ஆனா அந்த நொடி நம்ம மனசுக்குள்ளஆயுசு முழுக்க வாழுது.இப்போ போன் கேமரா எல்லார்கிட்டயும் இருக்கு.ஆயிரம் போட்டோ எடுக்குறோம்,ஆனா மனசுல பதியுறது ஒரு சில போட்டோதான்.ஏன்னா போட்டோ நல்லா இருக்கணும்னு இல்ல,அந்த நொடி நல்லா இருக்கணும்.அந்த நொடியில இருந்த மனுஷங்களும்,அந்த சிரிப்பும்,அந்த பாசமும்,அந்த உணர்வும் அதுதான் ஒரு போட்டோவைவெறும் படத்திலிருந்து ஒரு நினைவாக மாற்றுது.அதனாலதான் புகைப்படம் எடுக்குறது நினைவுகளை சேமிக்கிறதல்ல நம்ம வாழ்க்கையில மீண்டும் வாழ முடியாத சில நொடிகளை மட்டும் திரும்பிப் பார்க்கிற வாய்ப்புஒரு போட்டோ எடுங்க படத்துக்காக இல்ல பல வருடங்கள் கழிச்சு,“இந்த நொடி ரொம்ப அழகா இருந்துச்சு ன்னு சொல்லிக்கிறதுக்காக ஞாபகங்கள சேகரிக்குறதுக்காகனு Suryan FM சார்பா என்னோடைய இந்த கதையை Photography Day -ல சொல்லி முடிக்குறேன்.
Article By – RJ Mozhiyan

