Disappeared like she never existed-னு ஒரு meme படிச்சாலே அது இவங்கள பத்திதாங்குற அளவுக்கு இவங்க நடிச்ச படங்கள் கம்மி… ஆனா அவ்ளோ fans இருக்காங்க இவங்களுக்கு.தமிழ் சினிமால ஒரு காலத்துல முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, தனக்குன்னு ஒரு தனி இடத்தைப் புடிச்சவங்க Actress Asin…அழகான சிரிப்பு, துரு துரு பேச்சு… இயல்பான facial expressions-னு ஒவ்வொரு character-லயும் unique-ஆ நடிச்சிருப்பாங்க. Including தமிழ்,மலையாளம், தெலுங்கு, ஹிந்தினு பல language movies-லயும் நடிச்சு india முழுக்க famous ஆனாங்க.
Basic-ஆ 1985ல அக்டோபர் 26… கேரளம் கொச்சியில பிறந்தவங்க அசின் தொட்டும்கல்.சினிமாக்கு வரதுக்கு முன்னாடி ADS நடிச்சிட்டு வந்த இவங்க later-ஆ தன்னோட acting career ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.Then 2001-ல release ஆன நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா-ங்குற மலையாள movie மூலமா cine field-ல heroine-ஆ introduce ஆனாங்க.
அதுக்கு அப்புறம் 2003-ல release ஆன அம்மா நானா ஓ தமிழ அம்மாயி-ன்னு ஒரு தெலுங்கு movie அசினோட cine career-ல important breakthrough இருந்துச்சு. இந்த படத்துக்கு Best Actress-க்கான Filmfare Award வாங்கினாங்க.Acting மட்டுமில்லாம dancing-லயும் இவங்க Rock Star தான்.

Next 2004-ல ரவி மோகனோட சேர்ந்து நடிச்ச எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் மூலமா தமிழ் சினிமால introduce ஆனாங்க.தன்னோட First தமிழ் படத்திலேயே செம்மயா நடிச்ச அசின்- க்கு, continuous-ஆ leading actors கூட நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அதை தொடர்ந்து 2005….game changer-ஆ..அசினோட Acting career-ல மாறுச்சு because கஜினி, மஜா, சிவகாசின்னு எல்லா Movies-சும் நல்ல fame தேடி தந்துச்சு.
அதுலயும் சூர்யாவோட சேர்ந்து நடிச்ச கஜினி படத்துல கல்பனா அப்படிங்கற character- இன்னும் நம்ம மனசுல ரொம்ப strong-ஆ,வெகுலியா and cute-ஆவும் பதிஞ்சிருக்கு.அப்படி
Good hearted girl with many dreams-ன்னு soulfull-ஆன இவங்க acting-காக Filmfare Award for Best Tamil Actress கெடச்சது. Also சுடர் மணி ஜட்டி விளம்பரம் பன்னுரியா-னு? இவங்க கேக்குறதுலாம் நம்மள ரொம்ப ரசிக்க வெக்கிர மாதிரி இருக்கும்.
And then அஜித்தோட வரலாறு, விஜயோட போக்கிரி, சிவகாசி, விக்ரம் கூட மஜா, சூர்யாவோட வேல், கமல்ஹாசனோட தசாவதாரம்-னு பல movies நடிச்சிருக்காங்க.இவங்க Love, comedy, குடும்பப் பின்னணி மாதிரி different story plots-ல திறமையை வெளிப்படுத்தி Rock பண்ணியிருப்பாங்க.
அதனாலேயே 2008-ல கமல்ஹாசன் and asin combo acting-ல release-ஆன தசாவதாரம் movie-யும் அசினோட cine journey-ல important milestone-ஆ அமைஞ்சது. தமிழ் and தெலுங்குல leading actress-ஆ இருந்த அசின், later-ஆ இந்தி cinema-லயும் கலக்க ஆரம்பிச்சாங்க.
That is 2008-ல ஆமிர் கானோட சேர்ந்து கஜினி remake-லயும் கல்பனா role-ல super-ஆ நடிச்சு இந்திலயும் மிகப்பெரிய intro-வ ஏற்படுத்திகிட்டாங்க.Also இந்த movie-காக Filmfare Award for Best Female Debut வாங்கினாங்க. After that 2011-ல விஜயோட சேர்ந்து காவலன் movie-ல நடிச்சாங்க. இதுல இவங்க நடிப்பு நம்மள ஆச்சரியபட வெக்கிற அளவுக்கு ரொம்ப நல்லாருக்கும்.
Then இந்தி cinema-ல சல்மான் கானோட லண்டன் ட்ரீம்ஸ், ரெடி, அக்ஷய் குமாரோட கில்லாடி 786, ஹவுஸ்ஃபுல் 2, போல் பச்சன்,மாதிரியான வெற்றிப் படங்களையும் நடிச்சாங்க. Simple-ஆ south indian film industry தொடங்கி இந்தி cinema வர successful-ஆ continue பண்ணினது அசினோட முக்கியமான சாதனைகள்-ல ஒன்னு.
அசினோட cine industry contribution-ன பாராட்டி 2009-ல தமிழக அரசோட கலைமாமணி விருது வழங்கப்பட்டுச்சு… then 2013-ல தென்னிந்திய சினிமாவுக்கான contribution-அ பாராட்டி SIIMA award function-ல சிறப்பு விருதும் வழங்கப்பட்டுச்சு. தமிழ், தெலுங்கு, இந்தி-னு three languages-ல ஃபிலிம்பேர் awards win பண்ணின actresses-ல அசினும் ஒருத்தவங்க.
After all these achievements 2015-ல ஆல் இஸ் வெல் movie-க்கு அப்பரம் அசின் வேர எந்த Movie-லயும் நடிக்கல…இப்பவும் கூட இவங்க re-entry -காக காத்துருக்க fans-ல நானும் ஒன்னு.இருந்தாலும் இப்படி short period-ல பலரோட favourite-ஆ அப்பவும் சரி இப்பவும் சரி நிலைச்சிருக்க கூடிய,queen of Kollywood-னும் செல்லமா பாராட்ட படும் Best actress Asin-க்கு சூரியன் FM-ன் Happy Birthday wishes.

