அன்பு, பாசம், காதல் இதுலாம் நமக்கு கிடைக்காம போனா கண்டிப்பா நமக்குள்ள ஒரு Psycho உருவாகுவான். நாம ஒரு சிலர் அத கடந்து வந்துருவோம். But கடந்து வரமுடியாதவங்க ஒரு கட்டத்துல Psycho வா மாறுவாங்க. தமிழ் சினிமால செங்கல் Psycho னு ஒரு கதாபாத்திரம் ட்ரெண்ட் ஆச்சி. அத பாத்து சிரிச்ச நாம, நம்ம இயக்குனர் மிஷ்கின் அவர்களுடைய Psycho திரைப்படத்தை பார்த்து மிரண்டு போனோம்.
ஆமா உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ்னு பல பேரு நடிச்ச திரைப்படம் தாங்க இந்த Psycho. இசைஞானி ஓட கை வண்ணம் இந்த படத்துல நிறைஞ்சி இருந்தத சொல்லியே ஆகணும், ஒருத்தர் இசைல கிங் அப்படின்னா இன்னொருத்தர் Direction-ல கிங், இவங்க Combo பக்காவா ஒர்கவுட் ஆகியிருந்தது. நம்ம உதயநிதி இந்த படத்துல மிகச்சிறப்பா நடிச்சிருப்பாருங்க.

இதுல அந்த Psycho கொலைகாரனுக்கு போதிய அன்பு, பாசம் கிடைக்காத பட்சத்துல அவரோட ஆள் மனசு பாதிக்கப்பட்டு அவரு ஒரு Psycho வா மாறுறாரு. பல பெண்கள கடத்தி தலையை வெட்டி கொல்ற இந்த Psycho-வ பாத்து, நீ Psycho இல்ல… உனக்கு அன்பு தேவப்படுதுனு தாகினி ன்ற கதாபாத்துரத்துல நடிச்ச அதிதி ராவ் உணர்த்தியிருப்பாங்க.
அதுமட்டுமில்லாம காதல் ஒருத்தர எந்த அளவுக்கு போக வைக்கும் அப்படின்னு கவுதம்ன்ற கதாபாத்திரம் மூலமா இயக்குநர் மிஷ்கின் தெளிவா காட்டிருப்பாரு. அதாங்க நம்ம உதயநிதி ஓட கதாபாத்திரம் தான். பார்வையற்ற ஒரு காதலன், காதலிக்காக என்ன வேணா பண்ணுவான்னு புரியவச்சிருந்தாரு இந்த படத்தோட இயக்குனர் மிஷ்கின். ஒரு படத்துல Hero-க்கு எப்பயுமே Feelings இருக்குற மாதிரி, வில்லனுக்கும் Feelings இருக்கும்.

இன்னும் சொல்லப்போனா ஒருத்தரோட உணர்வுகள் தான் அவங்கள நல்லவங்களாவும் கெட்டவங்களாவும் மாத்துது. அப்டி ஒரு அன்புதான் கண்ணு தெரியாத ஒருத்தர ஹீரோவாவும், ஒருத்தர மனரீதியா வில்லனாவும் மாத்திருக்கு. அதுமட்டுமில்லாம வில்லன் Sucide பண்ணும்போது கூட நம்ம கண்களும் கலங்கத்தான் செய்யும். இந்த படத்த எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம் சலிப்பே வராது. கேமரா Angles வச்சி யாருடைய இயக்கம்னு சொல்லிடலாம்.
அந்த மாதிரி இந்த படத்துல நம்ம மிஷ்கின் அவர்களோட Frames பக்கவா இருந்துச்சு. இந்த படம் மிஷ்கின், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ்-னு எல்லாருக்கும் சிறந்த படம்தாங்க. 4 ஆண்டு ஆனாலும் சலிக்காத திரைப்படம்னா அது psycho தான்.