சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் #45YearsOfRajinism என்ற டேகை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டுகால திரைப் பயணத்தை Common DP வெளியிட்டு கொண்டாடினர். இந்த Common DP போஸ்டரை திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். குறிப்பாக மம்முட்டி, மோகன்லால், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், சந்தோஷ் சிவன், சுனில் ஷெட்டி, சௌந்தர்யா ரஜினிகாந்த், பீட்டர் ஹெய்ன், பிரேம்ஜி, பா. ரஞ்சித் ஆகியோர் இந்த போஸ்டரை வெளியிட்டனர். அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் சூப்பர் ஸ்டாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy to release our Pride of Indian cinema,Super star @rajinikanth sir’s #45YearsOfRajinismCDP 🙏👍😊 pic.twitter.com/RL2uLTt9Zx
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 9, 2020
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர், அவரை வாழ்த்திய அனைத்து நல்ல இதயங்களுக்கும், தன்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் தனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் #நீங்கள்_ இல்லாமல்_ நான்_ இல்லை என்ற டேகையும் உபயோகப்படுத்தி உள்ளார். ரஜினியின் ட்விட்டர் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே #நீங்கள்_ இல்லாமல்_ நான்_ இல்லை என்ற டேக் இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கிவிட்டது.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
— Rajinikanth (@rajinikanth) August 9, 2020
Common DP போஸ்டரில் சூப்பர்ஸ்டாரின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களான தில்லு முல்லு, எந்திரன், பாட்ஷா, காலா, சிவாஜி, பில்லா போன்ற கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த Common DP போஸ்டரை கீழே காணுங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மேலும் பல வெற்றி வருடங்களை தன் திரைப்பயணத்தில் கடக்க வேண்டுமென சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம்.