Cinema News Stories

ராதிகா சரத்குமார் எனும் சிறந்த நடிகை!

“உனக்கு ஆடு வாங்கியாரத் தெரியாது கோழி வாங்கியாரத் தெரியாது ஆனா சோடா மாத்திரம் வாங்கிட்டு வர தெரியுமோ”… Jeans படத்துல வர இந்த வசனத்தை யாராலயும் மறக்க முடியாது… ரொம்ப யதார்த்தமா Jeans படத்துல ஒரு gray shade character-அ ராதிகா சரத்குமார் அவர்கள் பண்ணி இருப்பாங்க…

அவங்க கிட்ட நீங்க என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அந்த கதாபாத்திரத்துக்கு ஒரு justification-அ இவங்க நடிப்பு மூலம் கொடுக்கக்கூடிய ஒரு balanced actress… பாரதிராஜா அவர்களோட கிழக்கே போகும் ரயில்la ஆரம்பிச்ச இவங்களோட நடிப்பு பயணம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார் top actors கூட சேர்ந்து நடிச்சதோட இப்பவும் தொடர்ந்து கிட்டு இருக்கு…

‘நானும் ரவுடி தான்’ படத்துல ஒரு ஜாலியான அம்மாவா நடிச்ச அப்பவும் சரி, தர்மதுரை படத்துல “எங்கயாவது போன்னு” அழுதுகிட்டே ரொம்ப ஆழமான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தின அப்பவும் சரி ஒரு சிறந்த நடிகையா, ராதிகா சரத்குமார் அவர்கள நாம எல்லாரும் ரசிக்க மறந்ததே இல்ல.

இவங்களோட நடிப்பு மூலமா வெள்ளித்திரைய கலக்கினது மட்டுமில்லாம சின்னத்திரைலயும் சித்தி, வாணி ராணினு ஒரு கலக்கு கலக்குனாங்க… 1995 “நான் பெத்த மகனே” படத்துல வக்கீலா ஒரு கேரக்டர் பண்ணி இருப்பாங்க கண்டிப்பா அந்த கதாபாத்திரத்துல ராதிகா சரத்குமார் அவர்கள் நடிச்சதுக்கு அவங்களுக்கு ஒரு Special mention கொடுத்தே ஆகனும்…

“மேலும் மேலும் இவர்களுடைய நடிப்பு சேவை தமிழ் சினிமாவுக்கு தேவை ன்னு” சொல்லி ராதிகா என்னும் Balanced actress-க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது Suryan fm

Article by RJ BARATHI

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.