இயக்குனர் சுசீந்திரனுடைய அப்பா ஒரு கபடி பிளேயரா இருந்ததால அவரோட கஷ்டங்களை வெண்ணிலா கபடிக்குழு படத்துல காமிச்சு தன்னுடைய முதல் படத்துல வெற்றி கண்டார் இயக்குனர். சுசீந்திரனோட ரெண்டாவது படம் எப்படி இருக்கப்போகுதோ அப்புடிங்கற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க… பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா அப்படீன்னு ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசத்தை காட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கிய கார்த்தி உடைய நான்காவது படம் எப்படி இருக்கப் போகுதோ அப்புடிங்கற எதிர்பார்ப்பு இன்னுமொரு பக்கம்னு வெளிவந்த படம் தான் நான் மஹான் அல்ல.
ஒரு First-date-ல பசங்க எப்படி எல்லாம் பொண்ணுங்கள impress பண்ண ட்ரை பண்ணுவாங்களோ அந்த கோட்பாடுகளையெல்லாம் ஒடச்சு ஒரு புது அகராதியையே இந்த படத்துல சொல்லி இருப்பாரு. நடுத்தர இளைஞர்களுடைய நடைமுறையை விலக்கிருப்பாரு, அதுவும் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச வகையில. அதுமட்டுமில்லாம எந்த ஒரு வாலிபரும் love பண்ற பொண்ணோட அப்பா, ஒரு ரௌடிய சந்திக்க கூட்டிட்டு போனா பதறிடுவாங்க! ஆனா நம்ம கதாநாயகன் அந்த ரௌடிக்கு ரொம்ப பிடிச்ச ஒரு ஆளா முதல் சந்திப்புலயே மாறிடுவாரு, இது யாருமே எதிர்பார்த்திடாத ஒரு twist-ஆ இருந்தது.
இயக்குனர் சுசீந்திரனுடைய சாதுரியத்த சும்மா சொல்லிட முடியாது. துள்ளலான ஒரு கதைக்களம் இருக்கக் கூடுமோன்னு நம்ம யோசிக்கிற அளவுக்கு யுவன் ஷங்கர் ராஜா உடைய இளமையான காதல் பாடல்கள், காஜல்-கார்த்தி ஒரு அருமையான காதல் ஜோடி, அழகான நடுத்தர குடும்பம், அண்ணன்-தங்கச்சி சண்டை, புதுசா வேலைக்கு சேர்ந்த நாயகன் அப்புடின்னு படத்த ஆரம்பிச்சு, ரொம்பவும் ஆழமான ஒரு பிரச்னையை ஒரு வாலிபர் எப்படி சமாளிக்கப்போறாரு அப்படீங்கிற படபடப்பு நம்ம ஒவ்வொருத்தர்க்குள்ளயும் ஊடுருவுற வரைக்கும் ரொம்ப நுணுக்கமா திரைக்கதையை அமைச்சிருப்பாரு.
போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்கள், அவர்களுடைய எண்ணங்கள், இதெல்லாம் எந்த அளவுக்கு மோசமா இருக்கும், எப்பேர்ப்பட்ட செயல்களை சாதாரணமா செய்ய வைக்கும் அப்படியெல்லாம் யோசிக்க வெச்சு நம்மல நிலை குலைய வெச்சிரும். மொத்தத்தில் நான் மஹான் அல்ல, நாம் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு முரண்பாடான கதைக்களத்தை கொண்ட ஒரு அசாதாரணமான படைப்பு.