Specials Stories

22 YEARS OF ‘BABA’

எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையை பிரிச்சிக்க சொன்ன காம்பினேஷன் மூணுமணிநேர சினிமா குள்ள வாழ்க்கைய அடக்குன காம்பினேஷனா மாறின படம் தான் பாபா. ஒரு படம் தொடங்குறப்ப அந்த படம் ஹிட் ஆகுமா இல்ல பிளாப் ஆகுமானு தான் கேள்விகள் இருக்கும்.

ஆனா இந்த படம் பத்தின தகவல் வந்தப்பவே  சூப்பர் ஸ்டார்க்கு இது கடைசி படமா இல்ல comeback கொடுப்பாரா ,திரும்பவும் நடிப்பாரானு எக்கச்சக்க கேள்விகள்,அந்த சலசலப்புக்கு மத்தில வெளி வந்த படம் தான் பாபா. ஆயிரம் அதிசியம் நிறைந்தது பாபா ஜாதகம்னு படம் ஆரம்பிச்சாலும் படம் வந்த நேரத்துல பலரை ஆச்சர்ய பட வச்ச படமா தான் இந்த படம் இருந்துச்சு.

பொதுவா ஒரு படம் பாத்துட்டு வந்த அன்னைக்கு நைட் கனவுல அந்த படத்துல வர மாதிரியான காட்சிகள் கனவுல வரும்னு சொல்லுவாங்க.ஆனா சூப்பர் ஸ்டாருக்கு கனவுல வந்த காட்சிகளினால தான் இந்த படமே உருவாச்சுனு உங்களுக்கு தெரியுமா .ஓர் நாள் ரஜினிகாந்த் அவர்கள் தூங்குறப்ப அவர் இமயமலை போற மாதிரியான காட்சிகள் அவர் கனவுல வர, அத வச்சு ஒரு கத பண்ணலன்னு அவருக்கு தோன, அந்த கதையை திரைக்கதையா அவரே எழுதுனாரு.

அதுக்கப்பறம் இயக்குனரை அணுகி தான் இந்த படம் உருவானுச்சு. இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அந்த நேரம் அதிகமானத்துக்கு இந்த படத்தோட திரைக்கதை & தயாரிப்பாளர் ரஜினிகாந்த் அவர்கள் அப்படிங்கிறத தாண்டி படையப்பா படத்துக்கு அப்பறம் 3 வருட இடைவெளி விட்டு இந்த படம் வந்தது தான் பெரிய எதிர் பார்ப்ப ஏற்படுத்துச்சு.தலைவரோட comeback படமா இருக்கும்னு எல்லாருமே எதிர் பார்த்த படமும் இது தான்.

பாபா படத்துலதான் முதன்முறையாக ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகா ஜோடியாக நடிக்கும் படமாக முதலில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதுக்கு அப்பறமா  மலையாள நாயகி சம்யுக்தா வர்மாவை நியமிக்க முடிவு செய்தனர், இறுதியாகதான் இந்த படத்துக்குள்ள வந்தாங்க  மனிஷா கொய்ராலா.

பாபா படத்துல பலரையும் ஈர்த்த விசியம் என்னனா அந்த ஏழு வரம் தான்.சூப்பர்ஸ்டார்  அந்த 3  வரத்தை டெஸ்ட் பண்றதுக்காக use பண்ணப்ப அவர் பீல் பன்னரோ இல்லையோ அச்சோ அப்டினு நம்ம எல்லாரும் பீல் பண்ணி இருப்போம்.விக்ரம் ல டெல்லி வந்தப்ப vibe பண்ணாத விட  பாபா படத்துல நீலாம்பரி வந்தப்ப வேற level -ல vibe பண்ணாங்க.கௌண்டமணி இந்த படத்துல பாபாவோட மினி பாபாவா தான் வருவாரு.devotional கதைய ஆரம்பமா வச்சி படம் ஆரம்பிச்சாலும் தலைவருக்கான மாஸ் ,action , அம்மா செண்டிமெண்ட் ,காதல் ,பொலிடிகல் கதைனு full package-ஆ படம் இருக்கும்.

அந்த நேரத்துல தலைவர்ட்ட தொடர்ச்சியா கேட்ட கேள்விக்கு பதிலாவும் சில காட்சிகள் இருந்துச்சு.பல பெற மூணு முணுக்க வச்ச பாடல்கள் இசை புயலோட இசைல இந்த படத்துல இருக்கும். இப்படி பல எதிர்ப்பார்ப்போட இந்த படம் வந்தாலும் இந்த படம் ரிலீஸ் ஆனப்ப பெருசா கொண்டாடப்படல .

ஆனா தொலைக்காட்சிகள இந்த படம் வந்ததுக்கு அப்பறமா குழந்தைகள்னால பெருசா விரும்பி பார்க்கப்பட்ட படமா மாறுச்சு.இந்த படம் சாய்ங்காலம் தொலைக்காட்சில வருதுன்னா அன்னைக்கு வீட்ட விட்டு  வெளிய போகாத தருணங்கள் எல்லாருக்குமே இருக்கும்.

இன்னைக்கு இருக்க Re-Release கலாச்சாரத்துல பாபா படம் டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு, டிசம்பர் 10, 2022 அன்று, ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, மாற்றப்பட்ட  முடிவோடு  வெளியிடப்பட்டது. Re – Release ஆனப்ப எதிர்ப்பார்த்த விட box office ல நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அப்போவே இந்த படத்த கொண்டாடாம விட்டோமேன்னு பலர் feel பண்ணாங்க.அன்னைக்கும் சேரி இன்னைக்கும் சேரி எப்போவுமே தலைவரோட cult classic பட வரிசையில பாபா-க்கு தனி இடம் இருக்கும்.

RJ MOZHIYAN, PONDY.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.