கிரிக்கெட் இந்தியாவ பொறுத்தவரைக்கும் இது ஒரு unofficial தேசிய விளையாட்டு. கிரிக்கெட் பத்தி பேசும்போது பொதுவா batsman பத்தி தான் எல்லாரும் பேசுவாங்க. ஆனா பவுலர்ஸ் பத்தி யாராவது பேசுறாங்க அப்படின்னா அவரு ஏதோ சிறப்பான தரமான சம்பவம் பண்ணி இருப்பார்.
ஆமாங்க கிரிக்கெட், இந்த விளையாட்டில் பேட்ஸ்மனுக்கு அந்த அளவுக்கு கட்டுப்பாடு கிடையாது அவர் எந்த பக்கம் வேணாலும் ரன் அடிக்கலாம், எவ்வளவு ஓவர் வேணாலும் பேட்டிங் பிடிக்கலாம். ஆனா பவுலர்ஸ் அப்படி இல்ல, இந்த கோட்டை தாண்டி ball போடக்கூடாது, இந்த கோட்டை தாண்டி கால் போக கூடாது, இத்தனை ஓவர்ஸ் தான் போடணும் அப்படி ஓவர் போடும் போது fielders இத்தனை பேர உள்ள வைக்கணும்.
இதுக்கு நடுவுல powerplay இப்படி பவுலர்ஸ்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் இது எல்லாத்தையுமே தாண்டி match win பண்ண வைக்கிறாங்க அப்படின்னா உண்மையாவே அவங்க legend தான். அப்படி இந்தியாவுல உருவான ஒரு legend தான் ஜவகல் ஸ்ரீநாத். 2024 இந்தியா உலகக் கோப்பையை win பண்ணதுக்கு முக்கிய காரணம் பும்ரா.
இது எந்த அளவுக்கு உண்மையோ அதே மாதிரி 90-கள்ல இந்தியா ஓட பவுலிங் சிறப்பா இருந்து இருக்கு முக்கிய காரணம் ஜவகர் ஸ்ரீநாத்.
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல இந்தியாவுக்காக நாலு உலக கோப்பையில் விளையாடி இருக்காரு. அதுல 44 விக்கெட் எடுத்துருக்காரு. இந்தியாவுக்காக உலக கோப்பைல அதிக விக்கெட் எடுத்த பவுலர் இவரும் ஜாகீர் காணும் தான்.
இப்ப இருக்க 2கே கிட்ஸ்க்கு வேணா இவரை பத்தி தெரியாம இருக்கலாம். ஆனா 90ஸ் கிட்ஸ் பல பேருக்கு இவர்தான் ரோல் மாடல். இவர மாதிரி பவுலிங் போடணும் இவர மாதிரி ஆக்சன் இருக்கணும்னு சொல்லி ரோட்ல நடந்து போகும்போது இவரு மாதிரியே பவுலிங் போட்ட பல பேர் இருக்காங்க.
இந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் ல தாக்கத்தை ஏற்படுத்தின தலைசிறந்த பவுலர் ஜவகல் ஸ்ரீநாத். இப்ப இருக்கிற மாதிரி முன்னாடி எல்லாம் சோசியல் மீடியா இல்லாமல் இருந்த காலத்திலேயே இவருடைய பெயர் தெரியாதவங்க யாருமே இல்ல. அந்த அளவுக்கு இவருடைய bowling விக்கெட்டையும் எடுத்துச்சு. அவருடைய பெயரையும் மக்கள் மனசுல நிலநாட்டுச்சு. பிறந்த நாள் வாழ்த்துகள் ஜவகல் ஸ்ரீநாத்.