Specials Stories

Lokesh Kanagaraj: இளம் தலைமுறையின் ட்ரெண்ட் செட் இயக்குனர் லோகேஷ்..!

lokesh kanagaraj
lokesh kanagaraj

Lokesh Kanagaraj: தனது அழுத்தமான கதைகள் மற்றும் அதிரடி படங்கள் மூலம் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக மாறிவிட்டார். இயக்குநராக அறிமுகமானதிலிருந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் வரை, அவர் புகழ் மற்றும் தொழில்துறையில் செல்வாக்கு பெற்றதன் எழுச்சி பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை இந்த படைப்பின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.


ஒரு சாதாரண மனுஷனோட கனவு அவன் கனவுலையே நினைக்காத உயரத்துக்கு கொண்டுபோறாது எல்லாருக்கும் சாத்தியமானு கேட்டா எடுத்துக்காட்டு சொல்ல ஒரு சில பெயர்கள் தான் இருக்கும். அப்படிப்பட்ட அந்த பட்டியல்ல ஒரு பேங்க் ஆபிசரோட பெயர் வருது ,அந்த பெயர் தன்னோட படத்துல கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம்ன்ற வார்த்தைகளுக்கு கீழ வரணும்னு இன்னைக்கு பல நடிகர்கள் காத்திருக்காங்க அந்த மோஸ்ட் வாண்டட் பெயர் லோகேஷ் கனகராஜ்.

கோயம்புத்தூர்லருந்து சென்னைக்கு வர பஸ்ல பத்துமணி நேரம் ஆகும், அந்த பயணத்துல இன்னைக்கு நாம பாக்குற எத்தனையோ படங்களோட காட்சிகள் அந்த பத்து மணிநேரத்துல உருவாகியிருக்கும்..!
முதல் முறையா சென்னை வந்தப்போ தனக்கு நடந்த அனுபவத்தையும், தன்னோட கற்பனையையும் சேர்த்து “மாநகரம்”ன்ற ஒரு படத்த 2017 இயக்கி வெளியிடுறாரு.

lokesh kanagaraj
lokesh kanagaraj

2020 கொரனா காலத்துக்கு அப்பறம் தான் நாம தமிழ்ல வர சின்ன பட்ஜெட் படங்கள், மற்ற மொழி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாக்க ஆரம்பிச்சோம்… ஆனா 2017ல மாநகரம் படத்தை எதர்சையா பார்த்து படம் நல்லாயிருக்குனு ஒரு ஒரு ஆள் கிட்ட சொல்லி சொல்லி தியேட்டர நோக்கி மக்கள் வர ஆரம்பிச்சு பெரும் வரவேற்பு கிடைச்சது. அன்னைக்கு தமிழ் சினிமா கைகொடுக்த அந்த கைய இரும்புக்கையா நினைச்சு பிடிச்ச மாயாவி தான் இன்னைக்கு திரைல மாயாஜாலம் பண்ணிட்டுயிருக்காரு.

அடுத்து 2019ல “கைதி” தீபாவளி ரிலீஸ்! அந்த பக்கம் தளபதி விஜய் நடிச்ச பிகில் , ஆனா தியேட்டர்கள்ல தளபதி படத்துக்கு இணையா பிகில் சத்தம் கைதி வெளியிட்ட ஒவ்வொரு ஸ்க்ரீன்லையும் கேக்குது. ஒரு நாள் ராத்திரி நடக்குற கதைய ஒருத்தரால இவ்வளோ சுவாரஸ்யமா கொண்டு போக முடியுமானு எல்லாரும் பிரம்மிச்சு தமிழ் சினிமாவோட அடுத்த தலைமுறை இயக்குனர்னு மக்கள் மகுடம் சூடினாங்க. ஆனா அன்னைக்கு தெரியாது தமிழ் சினிமால LCUனு ஒரு UNIVERSE உருவாக இது தான் ஆரம்பமா இருக்கும்னு..!!

அந்த வெற்றி தீபாவளிக்கு யாரோட போட்டியா படத்த ரிலீஸ் பண்ணாரோ, அந்த மாஸ்டர் ஆஃப் மாஸ் மூவிஸ் தளபதி கூட சேர்ந்து பெரும் எதிர்பார்ப்போட கோலிவுட் சினிமாவ கோவிட் காலத்துக்கு அப்பறம் காப்பாத்த வந்த கூட்டணியா தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியிருந்துச்சு, ஆனா படம் முழு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தோட சாயல்ல இல்லைனாலும் இளம் ரசிகர்களை கவர்ந்து தியேட்டர் ஓனர்களுக்கு நல்ல கலக்க்ஷன கொடுத்துச்சு.

அடுத்து லோகேஷ் என்ன படம் பண்ணப்போறாருனு திரையுலகமே யோசிக்கும்போது உலகநாயகனோட விக்ரம் படத்த இயக்கப்போறாறுனு அறிவிப்பு வந்ததுல இருந்து, படம் 2022ல தியேட்டர்ல வெளியான நாள் வரைக்கும் விக்ரம் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு எல்லையில்லாம இருந்துச்சு. அதிக எதிர்பார்ப்போட வர படங்கள் ஏமாற்றம் தரும் அப்படின்ற மாயா வலைய கிழச்சு 100நாளுக்கு மேல பல தியேட்டர்கள்ல ஓடி இந்த கால சினிமா ரசிகர்களுக்கு உலகநாயகன்னா யாருனு காமிச்ச படமாவும், லோகேஷ் படங்கள்னா வசூலை குவிக்கும்னு தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் பணத்தோட லோகேஷ் கணகராஜா தேடி வந்தாங்க.

lokesh kanagaraj
lokesh kanagaraj

ஒரு FAN BOY சம்பவம்னா இதுதான்னு சொல்ற மாதிரி உலகநாயகனே கதைல தலையிடாத அளவு அவருக்கு செல்லபிள்ளையா மாறிட்டாரு லோகேஷ்.

இப்ப தான் இன்னோரு புயல் தமிழ் சினிமால வீச ஆரம்பிக்குது…. ஒரு ஹாலிவுட் ஸ்டைல் பின்னணி இசையோட பல கார்கள் ஒருத்தர தேடி விரைந்தோட, கையில கத்தியும் ,சுத்தியுமா புது லுக்குல தளபதி விஜய் லோகேஷ் கூட்டணில மறுபடி ஒரு முறை “லியோ” . ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்குற படங்கள் தமிழ் சினிமால இல்லையானு கேட்டவங்களுக்கு லோகேஷ் தான் அதுக்கு பதில் சொல்லுவாரு தன்னோட படைப்பாளனு எல்லோரையும் லியோ பக்கம் திரும்பவச்சது லியோ டீசர், ட்ரைலர்..!!படம் வெளியான நாள் முதல் சீன்லருந்து தளபதி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிச்சாங்க.லியோ படம் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டது முதல் பாதி தான், இரண்டாம் பாதில சில காட்சிகள் தேவையற்றதா இருந்ததாலையும், ஹிந்தில பெரும் வரவேற்பு இல்லததாலையும் ஆயிரம் கோடி கனவு இன்னும் கனவா தான் இருக்கு. ஆனா இப்ப எல்லாரும் லியோ பார்ட் 2 அறிவிப்புக்காக காத்திருக்காங்க.

லியோக்கு அப்பறம் FIGHT CLUB படம் மூலமா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தாரு லோகேஷ். இப்படி லோகேஷ் கனகராஜோட படங்களுக்கு இதுவரை இருந்த எதிர்பார்ப்புக்கும், தமிழ் சினிமாவோட ஆயிரம் கோடி கனவுக்கும் இரு மடங்கான நம்பிக்கையை தர போறது இந்திய சினிமாவோட ஒரே SUPERSTAR ரஜினிகாந்த் ஓட “கூலி”யா தான் இருக்கும்னு எல்லாரும் காத்திருக்காங்க.. அந்த காத்திருப்போட அடுத்தடுத்து கைதி 2,விக்ரம் 2 , லியோ 2 னு தொடர்ந்து வெற்றி படங்களை தந்து இந்திய சினிமாவே பெருமை படும் உச்சத்த தொட லோகேஷ் கனகராஜ்க்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.