Specials Stories

Happy Birthday Samuthirakani: திரைசமுத்திரத்தின் ஆழம் அறிந்த கலைஞன் சமுத்திரக்கனி

samuthirakani
samuthirakani

தமிழ் சினிமா எத்தனையோ கலைஞர்களோட வாழ்க்கைய எதிர்பாராத தருணங்கள்ல மாற்றியிருக்கு ,சிலர் கனவோட களத்துக்கு வருவாங்க ,சிலர அந்த சினிமாவே திரைக்களத்துக்கு தேர்ந்தெடுக்கும்.அப்படிப்பட்ட ஒரு திரைக்கலைஞன் தான் சமுத்திரக்கனி.

1973- விருதுநகர்ல பிறந்த சமுத்திரக்கனிக்கு தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு விருதுகள் வாங்கி தரப்போதுனு அன்னைக்கு தெரிஞ்சிருக்காது. ஆரம்பகாலங்கள்ல சமுத்திரக்கனிய நம்ம எல்லாருக்கும் இயக்குனரா தான் தெரியும். அவருடைய படைப்புகள் நமக்கு பல தாக்கங்களை தர காரணம்,அவர் உதவி இயக்குனரா பணிபுரிஞ்சது பார்தாலே பரவசமன்ற படத்துல இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் கிட்ட.

பார்த்தாலே பரவசம் , பருத்திவீரன் மாதிரியான சில படங்கள்ல சின்ன சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்ச சமுத்திரக்கனி இயக்குனரா உன்னை சரணைடந்தேன் , கேப்டன் விஜயகாந்த் அவர்கள வச்சு நெறஞ்சமனசு மாதிரியான படங்கள் இயக்கினாரு,ஆனா எதுவும் எதிர்ப்பார்த்த வெற்றிய தரல.

அடுத்து தன் திரைநண்பர் சசிகுமார் இயக்கத்துல சுப்ரமணியபுரம் படத்துல ஒரு முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சு மக்கள்கிட்ட பிரபலமானாரு.

அடுத்து தன்னோட இயக்கத்துல சசிகுமார வச்சு நாடோடிகள் படத்தை இயக்குறாரு. அந்த படம் ,படத்தோட பாட்டுனு தமிழ் சினிமா ரசிகர்களை பெரும்படையா தியேட்டர நோக்கி வர வச்சது. இன்னைக்கும் திருவிழாக்கள்ல ஆடுங்கடா மச்சான் பாட்டு இல்லாமயிருக்காது.

அடுத்து இந்த வெற்றிக் கூட்டணியோட பயணம் போராளி ,ஈசன் போன்ற படங்கள்ல தொடர்ந்திச்சு. ஆனா இந்த படங்கள் கதையம்சம் நல்லா இருந்தும் தியேட்டர்ல எதிர்பார்த்த வெற்றிய தரல.

ஒரு பக்கம் டைரக்க்ஷன், மறுபக்கம் இயக்கம்னு திரை பயணத்த தொடர்ந்த சமுத்திரக்கனிக்கு 2012ல வெளியான சாட்டை படம் மக்களோட மனசுல எனக்கு இப்பிடி ஒரு வாத்தியார் இல்லையேனு நினைக்குற அளவுக்கு தயாளன் கதாபாத்திரம் மூலமா இடம் பிடிச்சாரு சமுத்திரக்கனி.

தமிழ்நாடு அரசு விருது வென்ற நிமிர்ந்து நில் , பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தர அப்பா மாதிரியான கருத்துள்ள படங்களை இயக்கின சமுத்திரக்கனிய இயக்குனரா கொண்டாடின தமிழ் சினிமா,அவர நடிகரா இன்னும் ஒரு படி மேலையே கொண்டாட ஆரம்பிச்சாங்க .அதுக்கு முக்கிய காரணம் அடுத்தடுத்து சமுத்திரக்கனி தேர்ந்தெடுத்த படங்கள். வேலையில்லா பட்டதாரி,காவல், ரஜினி முருகன், விசாரணை,அம்மா கணக்கு ,தொண்டன்,ஆண் தேதை , வடசென்னை,கொளஞ்சி ,காப்பான், சில்லு கருப்பட்டி,தலைவி ,துணிவு ,வினோதய சித்தம்,டான் ,வாத்தி இப்படி ஒவ்வொரு படங்கள்லையும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைஞச்தால ஒரு நடிகரா இந்தியா முழுக்க பிரபலமானாரு சமுத்திரக்கனி.

தமிழ் சினிமாவ தொடர்ந்து தெலுங்குலையும் Ala Vaikunthapurramuloo, Krack, RRR, GODFATHER,VIMANAM,BRO,HANUMAN, GAME-CHANGERனு கிட்டத்தட்ட 20படங்களுக்கு மேல முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சு PAN INDIAN நடிகரானாரு சமுத்திரக்கனி.

இன்னைக்கு சமூக வலைத்தளங்கள்ல சமுத்திரக்கனினா அட்வைஸ் பண்ணுவாருனு சிலர் மீம்ஸ் போட்டுட்டு இருக்காங்க.ஆனா இரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகுற படங்களுக்கு மத்தியில குடும்பங்கள் ரசிக்குற படங்களை தேர்ந்தெடுத்த நடிக்குறது ,இயக்குறது சமுத்திரக்கனி மாதிரியான ஒரு சிலர் தான்.

விசாரணை படத்துக்கு தேசிய விருது வாங்கின நடிகர் சமுத்திரக்கனி இன்னும் பல விருதுகளை இயக்குனராவும் , நடிகராகவும் வாங்கி வாங்கி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞானவும் , குடும்பங்கள் உண்மையிலேயே கொண்டாடும் படங்களை தர இயக்குனராவும் வெற்றி பெற சூரியன் FMன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Article By – RJ SRINI.

About the author

Sakthi Harinath