ஒரு சொல் வாழ்க்கையை மாற்றும்-னு சொன்ன நம்ப முடியுதா? உண்மைதான்… ஒரு பழமொழி ஒருத்தர் வாழ்க்கைய மாற்றும் வல்லமை கொண்டது. அப்படி நம்ம வாழ்க்கைக்கு தேவையான பழமொழி & சின்ன வயசுல இருந்து நாம கேட்டு வளர்ந்த விஷயங்கள சார்ந்து இருக்கக்கூடிய 10 பழமொழி பற்றி இங்க பாக்கலாம்.
- யாதும் ஊரே, யாவரும் கேளிர் | Every town is home, Everyone is family
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” இத பல இடங்கள்-ல கேட்டிருப்போம்.. பாரதியார், திருவள்ளுவர், சங்க இலக்கியக் கவி கணியன்பூங்குன்றன போன்ற பலர் சொல்லியிருக்கும் தத்துவ வாசகம். — நாம் பிறந்த ஊர் மட்டும் தான் நம்ம ஊர் இல்ல. நாம் வாழும் இடமும் நம்ம ஊராக இருக்கலாம். ஒரு மனிதன மதம், இனம், மொழி, பகுதி, இல்லைனா தேசியத்தை வச்சு பிரிக்க முடியாது. எல்லாரும் ஒரே மனித குலத்து-ல தான் வர்றோம். - செய்யும் தொழிலே தெய்வம் | Work is Worship
நாம செய்யும் வேலை எதுவா இருந்தாலும், அதுக்கு தனி மதிப்பும், புனிதமும் இருக்கு. வேலை-னா ஒரு கடமை மட்டுமல்ல, அது ஒரு தவம். அதனால் தான் அத “தெய்வம்” ஆக சொல்லி சிறப்பிக்கிறோம். உங்க குடும்பம் நிம்மதியா வாழ்றதுக்கு நீங்க செய்யக்கூடிய வேலையும் ஒரு முக்கிய காரணம் தான். அந்த வேலைக்கான மரியாதைய கண்ணியதோடு அர்ப்பணிக்கும். - முயற்சி திருவினை ஆக்கும் | Effort brings fortune
சுருக்கமா சொல்லனுமா.. எண்ணானாலும் முயற்சிய கைவிட கூடாது..! எந்த ஒரு செயலாலும் ஒரே நாளி-ல வெற்றி கிடைக்காது. ஒரு மனுஷன் இடைவிடாத முயற்சி எடுத்தா அவனால எதையும் சாதிக்க முடியும். முயற்சி இல்லாம இருக்கிறவனுக்கு அதிர்ஷ்டமும் வராது. எந்த ஒரு செயலும் வெற்றியும் தராது. தொடர் முயற்சி ஒரு நாள் கண்டிப்பா திருவினை கைகூடும். - யாகாவாராயினும் நாகாக்க
யார் என்ன பேசினாலும் அவங்க யாராக இருந்தாலும் அவங்க பேசும் வார்த்தைக-ள கட்டுப்படுத்தணும்.
வாயினால தான் நல்லதும் கெட்டதும் பல சமயம் நடக்குது. தெரியாம நாம பேசுற ஒரு சின்ன வார்த்தை பல பிரச்சனைகளுக்கு தொடக்கமா அமையும். அதனால், வாயை-ய எல்லாவற்றுக்கும் மேல பாதுகாக்கணும். - Time is Gold | காலம் பொன் போன்றது
“காலம் பொன் போன்றது” என்ற பழமொழி நமக்கு கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒன்னு..! நேரம் ஒரு வகையில நம்ம வாழ்க்கையின் சொத்து. நாம் இழக்குர பணத்தை திரும்ப சம்பாதிக்கலாம் ஆனா நாம் இழக்கு நேரத்தை திரும்ப பெற முடியாது. நேரத்த வெட்டியா செலவாக்காம உழைக்கணும்-ன்ற பொருள் தான் இந்த பழமொழிக்கு அர்த்தம். - All that glitters is not gold | மின்னுவது எல்லாம் பொன் அல்ல
இன்றைய சூழலுக்கு மிக தேவையான பழமொழி தான் இது.. இந்த பழமொழி சொல்லும் life lesson என்னனா வெளிப்படியா அழகா, பிரகாசம இருக்கிற பல விஷயங்கள் நிஜமாவே மதிப்புடையதா இருக்கா-னு கேட்டா தெரியாது. சில நேரத்தில அது தப்பான பாதை இருக்கலாம். - இல்லத்தில் ஒழுக்கம் இல்லையெனில் எல்லாம் வீண் | Without discipline at home, all is in vain
ஒரு குடும்ப வாழ்க்கையோட ஒழுக்கத்தை பற்றிய பழமொழி தான் இது. ஒரு வீட்டில, குடும்ப உறுப்பினர்கள் ஒழுக்கம் இல்லாம இருந்தா – அந்த வீட்டின் அமைதி, பாசம், வளர்ச்சி எல்லாமே போயிடும். ஒழுக்கம் இல்லாத இடத்தில அன்பு இருக்காது, அடிக்கடி conversation நடக்காது, understanding, நம்பிக்கை வளராது முக்கியமா அந்த வீட்டோட குழந்தைகள் நல்ல வழியில் வளர முடியாது. - The Pen is Mightier than the Sword | எழுத்தும் பேச்சும் வாளை விட வலிமையானது
கத்தி / வாளால ஒருவர் உயிர எடுக்கலாம்.. ஆனா பேச்சாலும், எழுத்தாலும், யோசனையாலும் ஒருவரோடு மனதை நல்வழி படுத்தி மாற்றலாம். அதாவது, அருவருப்பான வன்முறைக்கு பதிலாக, புத்திசாலியான வார்த்தைகள், அறிவு, மற்றும் உணர்வுகளால பல விஷயங்களை மாத்த முடியும்… - Practice Makes Perfect | தொடர்ந்த பயிற்சி தான் சிறந்தவை உருவாக்கும்
அதாவது, நாம் ஒரு விஷயத்தில மீண்டும், மீண்டும் பயிற்சி செய்யும்போது, அந்தத் திறமை சிறந்ததாக பார்க்கப்படுது. தனிநபர் கிட்ட பார்க்கப்படுற திறமை ஒரு சாதாரணமா பார்க்கப்படும், அதே அவங்க அந்த திறமையை சுய முயற்சி எவ்வளவு நேரம் பயிற்சி செஞ்சாரோ என்பதே வெற்றிக்கான மையக் காரணம். - சிறு துளி பெரும் வெள்ளம் | Little drops make the mighty ocean
நம்மளோட சின்ன சின்ன முயற்சிகள் & சேமிப்புகள் எல்லாமே ஒன்னு சேர்ந்தா அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லமை கொண்டதா இருக்கும். அதாவது, சின்ன விஷயங்களை ஏற்க வேண்டும், நாளடைவில அது மிக பெரும் பலனை தரும்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடிச்சிருந்தா, இந்த தகவல்கள் தேவை படுற உங்க பிரெண்ட்ஸ்-கு மறக்காம Share பண்ணுங்க.
Article By Sakthi Harinath

