தொட்டது துலங்க வைக்கும் வாஸ்து நாள், வாஸ்து பகவான் கண் விழித்திருக்கும் இறுதி 36 நிமிடங்களே ஆகும்.
அந்தகாசுரனோடு சிவபெருமான் போர் புரியும்போது தோன்றியவர்தான் வாஸ்து. அளவில்லாத ஆற்றல் கொண்ட வாஸ்துவால் தீமை உண்டாகக்கூடும் என்று தேவர்களும் எண்ணினார்கள்.
அதீத பசியில் இருந்த வாஸ்து தேவன் அனைத்தையும் உண்ண ஆரம்பித்தார். இதனால் பிரம்மாவும், தேவர்களும் அவரை பூமியில் உறக்கத்தில் ஆழ்த்தினார்கள். ஆண்டுக்கு எட்டு நாட்கள், அதிலும் ஒன்றரை மணி நேரம் விழித்திருக்கும் வரத்தை அஷ்ட திக்கு பாலகர்கள் அளித்தனர். அதன்படி வாஸ்து பூஜை செய்வதற்கும் இந்த நேரத்தை உகந்த நேரமாக மாற்றினார்கள். அதேபோல் இந்த நேரத்தில் வாஸ்து பகவான் கண்விழித்து இறைவனை பூஜித்து பிறகு உணவு உண்பதாக ஐதீகம் உள்ளது.
இந்த நேரத்தில் வீடு , தொழில்இடம் ,தோட்டம் அலுவலகம், இவற்றை தொடங்கினால் விருத்தியடையும் என்று சொல்லப்படுகிறது.
“வாஸ்து” என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியாக வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி, மகிழ்ச்சி பெருகும்.
வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து பகவானின் அருளோடு வாஸ்து நாளில் பூஜை செய்து கட்டிடங்களை தொடங்குவோம், வளமான வாழ்வுக்கு வாஸ்து பகவான் வழி வகுப்பார்.