ஒரு முறை நாரதர் சூரியதேவரிடம் நீ உதயமாகும் போதும்,
மறையும்போதும் பார்ப்பது என்ன?என்ற கேள்வியைக் கேட்டு இருக்கிறார்.
அதற்கு சூரிய தேவர்
தான் உதயமாகும் போது பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும்
சர்வ வியாபியான விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளைச் சரணடைந்து தன் அன்றாட பணியைத் தொடங்குவதாகவும்,
தான் மறையும் மாலைப் பொழுதில்
திருமாலை அடி
முதல் முடி வரை முழுமையாகத் தரிசிப்பதுடன்
திருமால் கழுத்தில் அணிந்திருக்கும் மாலையையும் தரிசிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில்
திருமாலின் திருவடிகளை (கால்கள்) தரிசிப்பதால் அந்த நேரத்தை” காலை வேளை” எனவும்,
சூரியன் மறையும் மாலைப் பொழுதில்
திருமாலின் கழுத்தில் அணிந்துள்ள மாலையை தரசிப்பதால் அந்த நேரத்தை “மாலை வேளை” என்றும் பெயர் வரக்காரணமாயிற்று என்கிறார்கள்.
Article By – செல்வராஜ், கோவை.

