Cinema News Stories

Shankar Mahadevan: இனிமையான இசை குரலுக்கு பிறந்தநாள்

happy birthday Shankar Mahadevan 2026 in tamil
happy birthday Shankar Mahadevan 2026 in tamil

இனிமையான இசைகளை ரசிக்க காதுகள் வேணும். அதே இனிமையான இசைகளோட சேர்ந்து அருமையான பாடல்களை நமக்கு கொடுக்கணும்னா, கண்டிப்பா அதுக்கு சங்கர் மகாதேவன் குரல் வேணும் அப்படின்னு தான் சொல்லணும்.

இவர் சிங்கர் மட்டும் கிடையாது. பாடகர், இசையமைப்பாளர், இசை பயிற்சியாளர்னு பன்முகத் தன்மை கொண்டவர் . இவரோட பேர சொன்னவுடனே, இவர் பாடுன பல பாடல்கள் இப்போ உங்க காதுக்குள்ளே ஒலிச்சுக்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன். அந்த ஏரியா, இந்த ஏரியா, அந்த இடம், இந்த இடம்னு எங்க இருந்தாலும் நம்ம சிங்கர் சங்கர் மகாதேவன் கில்லி அப்படின்னு தான் சொல்லணும்.

happy birthday Shankar Mahadevan 2026 in tamil

காதல் பாட்டு வேணுமா? ‘96’ படத்துல காதலே காதலே பாட்டு இருக்கு. நல்லா வைப்ல எனர்ஜியோட என்ஜாய் பண்ணனுமா?அப்போ ‘படிக்காதவன்’ படத்துல படிச்சு பார்த்தேன் ஏறவில்லை பாட்டு இருக்கு. ஒரு பெண்ணை வர்ணிக்கிற மாதிரி பாட்டு வேணுமா? ‘சங்கமம்’ படத்துல வராத நதிக்கரை ஓரம் பாட்டு இருக்கு. காதல் தோல்வி ஃபீலிங் வேணுமா? ‘திருமலை’ படத்துல நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது பாட்டு இருக்கு. இந்த மாதிரி எல்லா எமோஷன்ஸ்லயும் ஷங்கர் மகாதேவன் அவர்கள் சும்மா கலக்கு கலக்குனு கலக்கி இருக்காரு அப்படின்னு தான் சொல்லணும். ஏதோ ஒரு வகையில, ஏதோ ஒரு ஃபீலிங்ஸ்ல தினமும் அவரோட குரல பாடல்கள் மூலமா நாம கேட்டுக்கிட்டு தான் இருக்கோம். இவர் தமிழ்ல மட்டும் இல்லீங்க ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி இந்த மாதிரி பல மொழிகள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்காரு.

இவ்வளவு அற்புதமான பாடல்களை பாடி இருக்காருன்னா கண்டிப்பா இவருக்கு ஏகப்பட்ட விருதுகள் கெடச்சியிருக்கும் இல்லையா! 2000, 2006, 2007 (2), 2008, 2009, 2011, 2012 (2), 2015 இந்த வருடங்கள்ல வெவ்வேறு பாடல்களுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கு. இதுவரைக்கும் 2 தேசிய விருதுகள் கிடைச்சிருக்கு. 2019-ல பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கு. இதுக்கு மேலவும் அவருக்கு ஏகப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு இருக்கு.

எதுக்கு இன்னைக்கு இவரைப் பற்றி நான் இவ்வளவு சொல்றேன்னா, இன்னைக்கு அவருக்கு பிறந்தநாள் (03-03-2026). பாடகர் சங்கர் மகாதேவன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிச்சுக்கிறதுல நான் பெருமைப்படுறேன்!

Article By – RJ Sandhiya