கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 47வது திரைப்படத்தின் First Look இன்று வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தன. அந்த வகையில் மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி கை கோர்க்கிறார்கள் என்ற செய்தி வந்ததிலிருந்தே ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த இரண்டு படங்களுக்கும் இசை அமைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே இந்த STR 47 திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த மாபெரும் வெற்றி கூட்டணி கோலிவுட்டில் மீண்டுமொரு Magic-ஐ நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.
இப்படத்தின் First Look வெளியாக உள்ளது என்ற செய்தி வந்ததிலிருந்தே சிம்பு ரசிகர்கள் #SILAMBARASAN47 என்ற Tag-ஐ trend செய்ய தொடங்கிவிட்டனர்.
இப்படத்திற்கு பாரதியாரின் புகழ்பெற்ற வசனமான “வெந்து தணிந்தது காடு” என்பதை Titleஆக வைத்துள்ளனர். வெளியிடப்பட்ட First Look போஸ்டரில் ஒரு தீப்பிடித்த காட்டின் நடுவே நீளமான கம்புடன் சிம்பு நிற்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்களுக்கு படத்தின் மீது உள்ள ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
- Sara Arjun New Avatar Goes Viral | Stunning Transformation Shocks Fans
- வள்ளுவம் போற்றுவோம்
- சிக்குக் கோலத்தின் பின்னால் உள்ள வாழ்வியல் நன்மைகள்
- விஜய் சேதுபதி என்னும் எதார்த்த நடிகன்
- தைத்திருநாள் வழிபாடு சிறப்புகள்
வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் First Look போஸ்டர் குறித்த சிம்புவின் Tweet-ஐ கீழே காணுங்கள்.

