டைரக்டர் சிவா-னு சொன்னதும் எல்லார் மனசுலயும் உடனே தோணுறது நம்ம தல அஜித் தான். Back to back தல படம் ஹிட் கொடுத்த டைரக்டர் சிவா. தமிழ்-ல பத்ரி படம் மூலமா ஒளிப்பதிவாளரா அறிமுகமானாரு.
அவருக்கான identity படமா சிறுத்தை படம் அமைஞ்சது. அது தான் அவர் தமிழ்-ல இயக்குன முதல் படம். தமிழ் படங்கள விட தெலுங்கு படங்கள் நிறைய இயக்கிருக்காரு. பாக்குறதுக்கு ரொம்ப soft nature, ஆனா அவருடைய படங்கள் அதிரடியா தான் இருக்கும்.

அப்பா மேல அதிகம் பாசமும் மரியாதையும் வைச்சுருக்க நம்ம டைரக்டர் சார், அவங்க அப்பா கடைசியா சொன்ன “நல்லா இரு” வார்த்தைய மிக பெரிய ஆசிர்வாதமா நினைக்குறாரு. விமர்சனங்கள பத்தி எப்போதும் கவலைபட மாட்டாராம். நல்ல விமர்சனமோ கெட்ட விமர்சனமோ எதையுமே அவரு தலையிலே ஏத்திக்க மாட்டாராம்.
அவருக்கு தோணுற விஷயங்களை ரொம்ப confident-ஆ express பண்ணுவாராம். கடினமான உழைப்புக்கும் கடினமா உழைக்குறவங்களுக்கும் அதிகமா மரியாதை குடுக்குற நம்ம டைரக்டர் கடினமா உழைச்சி தான் இப்போ சினிமா துறையில நிக்குறாரு.
Family-க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாராம் சிவா. அவரு இயக்குற அண்ணாத்தே படத்துக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் Waiting-ல இருக்காங்க.
வெற்றி இயக்குனர் சிவா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by Saranya
- Sara Arjun New Avatar Goes Viral | Stunning Transformation Shocks Fans
- வள்ளுவம் போற்றுவோம்
- சிக்குக் கோலத்தின் பின்னால் உள்ள வாழ்வியல் நன்மைகள்
- விஜய் சேதுபதி என்னும் எதார்த்த நடிகன்
- தைத்திருநாள் வழிபாடு சிறப்புகள்

