Cinema News Specials Stories

தமிழ் சினிமாவிற்கு இசைஞானியை பரிசளித்த பஞ்சு அருணாச்சலம்!

5 என்கிற எண்ணை ஹிந்தி-ல “பான்ச்” அப்படினு சொல்லுவாங்க. அதனால தான் 5 பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தை பஞ்சபூதங்கள்-னு சொல்றோம்.

இவர்கிட்ட 5 வகையான முகங்கள் இருக்குனு இயற்க்கைக்கு முன்னவே தெரியுமோ என்னவோ, இவராடோ பேருக்கு முன்னாடி “பஞ்சு” அப்படிங்குற பேரு ஒட்டிக்கிட்டே வந்து, கடைசியில அது அவருடைய அடையாளமாகவே மாறிடுச்சு. அவர் தான் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு. பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

இவருக்கு 5 முகங்கள் இருக்குங்க. இயக்குனரா ஒரு முகம், தயாரிப்பாளரா ஒரு முகம், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரா அடுத்த இரண்டு முகங்கள். ஆமா, அந்த ஐந்தாவது முகம் என்னனு யோசிக்கறீங்களா, அது தாங்க நம்ம இசைஞானி இளையராஜாவை தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தின முகம். ஒரு நண்பனா நம்மளோட எல்லா கஷ்டங்களையும் போக்க இசைஞானியோட இசை இருக்க காரணமா இருந்த முகம்.

இத்தனை சிறப்புகளும் உள்ள இவரு, ஜூன் மாதம் 18-ம் தேதி 1941-வது வருஷம் காரைக்குடியில இருக்குற சிறுன்கூடல்பட்டி கிராமத்துல பொறந்தாரு. தன்னுடைய மாமாவான “கவியரசு” கண்ணதாசன் அவர்களை தன் குருவா கொண்டவரு, 1962-ம் வருஷம் ஒரு பாடலாசிரியரா “மணமகளே மருமகளே” பாடல் மூலமா அறிமுகம் ஆகிறாரு. அதுக்கு அப்புறம் ‘The Rest is History’-னு சொல்ற மாதிரி அவரு கால்பதிக்காத இடமே கிடையாது.

1977-ம் வருஷத்துல “அவர் எனக்கே சொந்தம்” திரைப்படத்துக்கு தயாரிப்பாளரா ஆரம்பிச்சு, 1988-ல இயக்குனராவும் “மணமகளே வா” படத்துல காலடி எடுத்துவைச்சாரு. அன்னக்கிளி திரைப்படத்துல நம்ம இசைஞானியை அறிமுகப்படுத்தினதோட இல்லாம அந்த படத்துல இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் வரிகளும் எழுதுனாரு.

இளையராஜா அறிமுகமான நாள்: பஞ்சு அருணாச்சலம் மகன் பெருமிதம் | Dinamalar

கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்கள்ல பணியாற்றிய இவரு, இப்போவும் அந்த படங்களை திரும்ப இன்னொரு முறை பாக்கலாமா-னு ஏங்க வைக்குற அளவுக்கு நிறைய படைப்புகள் கொடுத்து இருக்காரு. ஜப்பானில் கல்யாணராமன், குரு சிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், தம்பிக்கு எந்த ஊரு, ராசுக்குட்டி ஆகிய படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு.

இவரோட ஒரு சிறந்த படைப்பை அங்கீகரிக்குற விதமா, 1982-வது வருஷம் தமிழ்நாடு மாவட்ட திரைப்பட விருதுகள் சார்பாக “சிறந்த வசன எழுத்தாளர்” பட்டமும் இவருக்கு கிடைத்தது. இப்படி அவரு நமக்கு கொடுத்த படைப்புகளை சொல்ல ஒரு பேனாவுடைய மை போதாதுங்க. அவருடைய பிறந்தநாளில் அவரை வாழ்த்தி நினைவில் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது Suryan FM.

Article By RJ Karthik

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.