Cinema News Specials Stories

என்றென்றும் உலக அழகி ‘ஐஸ்வர்யா ராய்’

ஐஸ்வர்யா ராய் முதலில் அறிமுகமானது தொலைக்காட்சியில் தான். 9-வது படிக்கும் போது முதன்முறையாக ஒரு Pencil விளம்பரத்தில் அறிமுகமாகி மாடலிங் துறையில் கால் பதித்தார்.

அதே சமயம் படிப்பிலும் முன்னணி மாணவியாக திகழ்ந்த இவர் 12ஆம் வகுப்பில் 90% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார். Zoology-யிலும் அவருக்கு அதிக ஆர்வம் வந்தது. ஆனால் கல்லூரிப் படிப்பில் Architecture-ஐ தேர்வு செய்தார். ஆனால் விதி அவரை உலக அழகியாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தது. சிறு வயது முதலே மாடலிங் துறையில் இயங்கி வந்தவர் கல்லூரி காலத்தில் படிப்பை விட்டுவிட்டு முழுமையாக மாடலிங் உலகில் நுழைந்தார்.

தன்னுடைய 18வது வயதில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற International Super Model Contest-இல் வெற்றி பெற்றார். அடுத்ததாக 1994-ல் நடைபெற்ற Miss World அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்றது முதல் இன்று வரை உலக அழகி என உலகெங்கும் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

இதற்கிடையில் 1993-ல் அமீர் கானுடன் இணைந்து குளிர்பான விளம்பரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இருந்தாலும் உலக அழகி முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானது தமிழில் தான்.

1997-இல் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநரான மணி ரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அன்று முதல் இன்று வரை இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளிலும் அறிமுகமாகி இன்று வரை முன்னணி நாயகியாக கோலோச்சி வருகிறார். ஹாலிவுட்டிலும் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி நடித்த Mr. & Mrs. Smith திரைப்படத்தில் ஏஞ்சலினா ஜோலி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அது நடைபெறவில்லை. அதே போல் ட்ராய் படத்திலும் பிராட் பிட் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் கேட்டுள்ளனர். அதுவும் நடைபெறவில்லை.

இந்தி திரையுலகின் ஜாம்பவனான அமிதாப் பச்சனின் மகன் அபிஷெக் பச்சனை கரம் பிடித்தார். இந்தியாவில் திருமணத்திற்கு பின்பு பல கதாநாயகிகள் காணாமல் போன நிலையில், இவரோ தற்போது வரை இளம் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வருகிறார்.

தமிழில் ராவணன், எந்திரன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக வலம் வந்து பார்வையாளர்கள் அனைவரையும் தன்வசப்படுத்தியுள்ளார். அடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.

இனியும் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து என்றென்றும் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார். அதுமட்டுமல்ல, என்றென்றும் உலக அழகி என்ற பெயருக்கு பொருந்தக் கூடியவர் ஐஸ்வர்யா ராய்.

Article By MaNo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.