நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மா உடனான காதலை உறுதி செய்துள்ளார்.
இந்திய திரையுலகில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக கோலோச்சி வரும் நடிகை தமன்னா. மிகச் சிறந்த நடிகையாக பல மொழிகளில் வலம் வருகிறார்.

சினிமாவில் அறிமுகமாகும் போது எப்படி இருந்தாரோ, அப்படியே இன்றும் இருக்கிறார். சில நடிகைகளுக்கு மட்டுமே இந்த வரம் வாய்ப்பதுண்டு. அதில் நிச்சயம் தமன்னாவும் ஒருவர்.
இந்திய சினிமாவில் சிறப்பாக நடினமாடக் கூடிய நடிகைகளில் இவர் முக்கியமானவர். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மாஸ்டரை வியக்கவைக்கும் வகையில் தேவி படத்தில் நடனமாடியிருப்பார்.

இவர் தற்போது பிரபல இந்தி வெப் சீரிஸ் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் தமன்னாவுக்கு ஜோடியாக விஜய் வர்மா நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்ற புகைப்படங்கள் பல நாட்களுக்கு முன்பிருந்தே சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இருவருக்கிடையிலான காதலை தமன்னா தற்போது உறுதி செய்துள்ளார்.

என்னுடைய Happy Place விஜய் வர்மா தான், நான் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நபரும் அவர் தான் என்றும் கூறியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.