Cinema News Specials Stories

‘யுவன்’ பெயர் அப்படியே தான் இருக்கும்!

இளையராஜா ’ஜானி’ படத்துல ’சென்யோரிட்டா’ பாட்டு கம்போஸிங்’ல இருக்குறப்போ பிறந்தவர் தான் யுவன். பைலட் ஆகனும்னு ஆசைப்பட்ட யுவன், ஸ்கூல் படிக்கும் போது அவரோட பிரெண்ட்ஸ் இப்போ இளையராஜா கிடையாது… ரஹ்மான் தான் சூப்பரா மியூசிக் பண்ணிட்டு இருக்காப்ளன்னு சொன்னதும்… எங்கப்பாவோட Legacy போக கூடாது’ன்னு முடிவு எடுத்து இசையமைப்பாளர் ஆன ஆள்… அதான் நம்ம யுவன்!

சின்ன வயசுலயே இசையமைப்பாளர் ஆன யுவன்’க்கு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துல தான் பெரிய ப்ரேக் கெடைச்சுது. அந்த படத்துல எல்லா பாட்டும் ஹிட் ஆகியும் அதுக்கு அப்பறம் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கல. அவர் சோர்ந்து போய் இருந்த நேரத்துல அஜித் அவர கூப்பிட்டு தீனா படத்துல வாய்ப்பு குடுக்குறாரு. அதுல இருந்து யுவன்’க்கு ஏறு முகம் தான். யுவன் Music போட்டாலே ஹிட்’ன்னு ஆகிருச்சு

கொஞ்ச வருஷம் யுவன் ஃபார்ம்ல இல்ல, பேன்ஸ் கம்மி ஆகிட்டாங்க’ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஒரு விருது வழங்கும் விழா’ல எல்லா இளம் இசையமைப்பாளர்களும் வந்தப்போ அவங்களுக்கு எல்லாம் பார்வையாளர்கள் Response இருந்துச்சு. ஆனா யுவன் வந்த அப்போ எறக்குறைய 10 நிமிஷம் யுவன் யுவன்’ன்னு கத்திட்டு இருந்தாங்க. அப்போ எனக்கு “This is Rocky’s KGF” தருணம் மாறி இருந்துச்சு. இப்போ தனுஷ் அவர்கள் சொன்ன விசயம் தான் ஞாபகம் வருது.

2000’ல இருந்து பக்கத்துல இருக்குற ஆளோட பெயர் மாறிட்டே தான் இருக்கும். ஆனா இந்த பக்கம் யுவன் ஓட பெயர் அப்படியே தான் இருக்கும். யுவன்’க்கு Comeback eh கிடையாது. அவர் எப்போதுமே Prime Form-ல தான் இருக்காரு. அதுக்கு உதாரணம் இப்போ வந்த “Love Today” படம் தான்.

Yuvan Shankar Raja family pics

நிறைய ஃபேன்ஸ் இருக்கிற யுவன் – இயக்குனர் காம்போ
யுவன் – செல்வராகவன்
யுவன் – ராம்
யுவன் – வெங்கட் பிரபு
யுவன் – விஷ்ணுவரதன்

எத்தன பேருக்கு தெரியும்னு தெரியல… யுவன் நிறைய ஹீரோக்களுக்கு இசையமைச்சுருக்காரு. அவர் அதிகமாக இசையமச்ச ஹீரோ “விஷால்” தான். இது வரைக்கும் 12 படம் பண்ணி இருக்காரு! யுவன் நீங்க எங்களுக்கு மனரீதியாக நிறைய உதவி பண்ணி இருக்கீங்க. நாங்க கஷ்டத்துல இருக்கப்போ உங்க பாட்டு தான் எங்களுக்கு “போதை”. அதுனால தான் உங்களை நாங்க உங்களை “Drug Dealer”ன்னு கூப்டுறோம்

உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். சூரியன் FM சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Article By RJ Vishal

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.