நம்ம எவ்வளவோ விஷயங்கள, மூட நம்பிக்கைப்பா இது… அப்படின்னு சொல்லிருப்போம். ஆனா அது மூட நம்பிக்கை இல்ல அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அறிவியலே இருக்குன்னு சொன்னா எவ்வளவு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு விஷயத்ததான் இப்ப நாம பாக்க போறோம்.
நம்ம பழைய சாமி படங்கள்ல கவனிச்சிங்கன்னா Climax Scene-ல ஹீரோக்கு உடம்பு சரி இல்லாமா எந்திரிக்க முடியாத அளவுக்கு போயிடும். அந்த Hero சாவ கூடாதுங்கறதுக்காக Heroine சாமி முன்னாடி பாட்டு பாடுவாங்க, கடைசில அந்த ஹீரோவும் உயிர் பொழச்சிடுவாங்க.
அதெப்படி சாத்தியமாகும்? கேக்கவே சிரிப்பா இருக்குல, ஏன் நிறைய பேர் யாகம் பண்ணுவாங்க, அதிக பிராத்தனைகள் நடக்கும், இதோட முடிவுல அவங்க அந்த நோய்ல இருந்து தப்பிச்சுடுவாங்க. இதெல்லாம் உண்மையா அப்படின்னா? கண்டிப்பா உண்மைதான்.
- மன்னா! மா மன்னா! | Happy Birthday Vadivelu
- Solomon Pappaiah: சாலமன் பாப்பையா: சிரிக்க வைத்த தமிழும், சிந்திக்க வைத்த பட்டிமன்றமும்
- ஞாபகம் வருதே-World Photography Day
- Arunima Sinha: விழுந்த இடத்திலிருந்து Everest வரை
- Elephant Day: யானைகள் இல்லன நாம உயிர் வாழ்வது கஷ்டம்
நம்மளுடைய உடல்நிலையோ, மனநிலையோ சரி இல்லைன்னா ஒரு பாட்டு கேக்கனும்னு தோணும், அந்த பாட்ட கேட்ட உடனே அந்த பாட்டுக்கு ஏத்த மாதிரியான மன நிலைக்கு நம்மளும் மாறிடுவோம். இதெல்லாம் எப்படி நடக்குதுன்னு கவனிச்சிங்களா? இதுக்குப் பின்னாடி எவ்வளவு பெரிய விஞ்ஞானம் இருக்குனு தெரியுமா?
2010, Mexico வளைகுடாவில் நடந்த எண்ணெய் விபத்துல பில்லியன் கணக்கான லிட்டர் Oil கடல்ல கலந்துடுச்சு. அதை எப்படி சுத்தப்படுத்தலாம்னு யோசிக்கிறப்போ, ஜான் ஹட்ச்ஹின்சன் என்ற மின் காந்த ஆற்றல் நிபுணர் 528Hz கொண்ட இசையின் மூலமா அந்த மொத்த கடல்ல கலந்த எண்ணெயையும் 4 மணி நேரத்துல சுத்தப்படுத்துனதா சொன்னாங்க.
இதுல என்ன முக்கியமான விஷயம் அப்படின்னா, அந்த 528Hz க்கு அவ்வளவு Power இருக்குன்னு சொல்லலாம். 528Hz க்கு நம்ம உடல்ல இருக்குற DNA வை சரிசெய்யக்கூடிய சக்தி இருக்குன்னு சொல்றாங்க. 528Hz அப்படிங்குறது தியானத்திற்கான ஒலி அதிர்வு-னு சொல்றாங்க.

மன்னா! மா மன்னா! | Happy Birthday Vadivelu
Vadivelu: வடிவேலுவைப் பற்றி எழுதலாம் என்று உட்கார்ந்ததும் முதலில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ஏன்னா, அவரைப் பற்றி புதுசா என்ன சொல்ல முடியும் என்று நினைத்தால், அவரைப் பற்றி நமக்குத் தெரிந்த விஷயங்களே நிறைய இருக்கிறது.ஆனா கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது.நமக்கு வடிவேலுவைப் பற்றி தெரியும். ஆனால் வடிவேலு என்ற மனிதரைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?அதுதான் இந்தக் கட்டுரையை எழுதணும் என்று தோண வைத்தது. சின்ன வயசுல TV-ல வடிவேலு காமெடி…

Solomon Pappaiah: சாலமன் பாப்பையா: சிரிக்க வைத்த தமிழும், சிந்திக்க வைத்த பட்டிமன்றமும்
Solomon Pappaiah: தமிழ் பட்டிமன்றம் என்றாலே பலரது நினைவில் முதலில் தோன்றும் குரல்களில் ஒன்று பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் குரல். எளிமையான மதுரைத் தமிழ், நகைச்சுவை கலந்த பேச்சு, இலக்கிய அறிவு, அதே நேரத்தில் சமூகத்தைப் பற்றிய ஆழமான பார்வை — இவை அனைத்தையும் ஒரே மேடையில் இணைத்த தனித்துவமான ஆளுமை அவர். சாலமன் பாப்பையாவின் பயணம் சாதாரணமானதல்ல. மதுரை திருமங்கலம் அருகே சாத்தான்குடியில் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அவர், கல்வியின் மூலம் முன்னேறி அமெரிக்கன்…

ஞாபகம் வருதே-World Photography Day
அன்னைக்கு காலைல 7 மணி இருக்கும்.ஒரு கப் தண்ணிய ஊத்தி எங்க அம்மா என்ன எழுப்புனாங்க.எழுந்து எல்லா வேலையும் முடிச்சிட்டு நா வெளிய வந்த மொதல்ல உன் ரூம் கிளீன் பண்ணுனு சொல்லிட்டாங்க.நானும் வேண்டா வெறுப்பா தான் போனே அப்போ நா பார்த்த அந்த ஒன்னு என்னைய குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போயிட்டு… அப்படி என்ன பார்த்தேன்னு யோசிக்கிறீங்களா என்னோட சின்ன வயசு photo தான்.அதுல நா என் தங்கச்சியோட நின்னுட்டு இருந்தேன்.இந்த photo எடுத்த அன்னைக்கு…

Arunima Sinha: விழுந்த இடத்திலிருந்து Everest வரை
Arunima Sinha – “விழுவது தோல்வியல்ல… விழுந்த பிறகு எழாமல் இருப்பதுதான் தோல்வி.” ஒரு ரயில் பாதை…அதற்கு நடுவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்…அந்தப் பெண்ணுக்கு அப்போது தெரியாது — அவருடைய வாழ்க்கை இங்கே முடிவதில்லை… இங்கிருந்துதான் ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமாகப் போகிறது என்று. அந்தப் பெண்ணின் பெயர் Arunima Sinha. 2011-ல், தேசிய அளவில் volleyball விளையாடிய அருணிமா அவர்கள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கொள்ளையர்களால் ரயிலில் இருந்து தள்ளப்பட்டார். அடுத்த ரயில் மோதியதில்…

Elephant Day: யானைகள் இல்லன நாம உயிர் வாழ்வது கஷ்டம்
யானைகள் இல்லன நாம உயிர் வாழ்வது கஷ்டம்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா? யானைகள் இந்த பூமியில் வாழ்கிற பிரம்மாண்டமான ,கம்பீரமான விலங்கு .அதோட உருவம் என்னதான் பெருசா இருந்தாலும் அதோட குணம் குழந்தை மாதிரி. மனிதர்களைப் போலவே அற்புதமான நினைவாற்றலும் ஆழமான பாசமும் கொண்ட ஒரு அழகான உயிரினம். யானைகள் வெறும் விலங்கு மற்றும் அது காடுகள்ல வாழ்ற காட்டோட பொறியாளர் அப்படின்னு சொல்லலாம் பிரம்மாண்டமாய் இருக்க இந்த யானை ஒவ்வொரு முறை நடக்கும் போதும்…

உலக யானைகள் தினம்: காடுகளின் மெகாவைட் பேரரசனும் மனிதர்களின் பேராசையும்!
பூவுலகில் நிலத்தில் வாழ்கின்ற மிகப்பெரிய விலங்கினமாகவும், மனிதனுக்கு அடுத்தபடியாக நீண்ட ஆயுட்காலம் கொண்ட பாலூட்டியாகவும் விளங்குவது யானை ஆகும். கம்பீரமான தோற்றமும், வியக்கத்தக்க நுண்ணறிவும் கொண்ட இந்த பிரம்மாண்ட விலங்கினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம். யானைகளின் வகைகள் யானைகள் பொதுவாக 3 முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன: ஆப்பிரிக்கா புல்வெளி யானைகள் ஆப்பிரிக்கா காட்டு யானைகள் ஆசிய யானைகள் இவற்றுக்கிடையே பல உடல் அமைப்பிய வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவில் வாழும் யானைகளில் ஆண் மற்றும் பெண்…
இது மாதிரியான ஒலி அதிர்வுகள் நம்முடைய உடம்ப சரி செய்யுது அப்படினும், இதனாலதான் தியானம் பண்ணுறவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னும் சொல்றாங்க. நீங்க கோவில்ல பஜனை பாடுறதெல்லாம் கேட்டிருப்பீங்க… அதெல்லாம் 432Hz-ல இருக்கும்.
இது நம்மல இந்த உலகத்தோட இயற்கையோட இணைக்கும். இது நம்மளுடைய மனச தூய்மைப்படுத்தும்னு சொல்றாங்க. நம்ம தியானம் பண்ணும்போது கவனிச்சிங்கன்னா Aum, Ham, Om அப்படிங்குற வார்த்தைகளெல்லாம் இந்த ஒலி அதிர்வுலதான் இருக்கும்.
இன்னைக்கும் நிறைய வீட்டுல சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற பாட்டை போட்டு கேக்குறதால நம்முடைய உடம்பு சுருசுருப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்குதாம். இந்த மாதிரியான பல விஷயங்கள மூடநம்பிக்கைகளா இருக்கும் அப்படிங்குறத தாண்டி அதுக்குப்பின்னாடி என்ன அறிவியல் இருக்கும்னு கண்டிப்பா யோசிக்கனும். இந்த மாதிரி உங்களுக்கு எதாவது விஷயங்கள் தெரிஞ்சா கமெண்ட் பண்னுங்க.

