லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ‘Lion King’ Simba விடியோவை வெளியிட்டு சற்று நேரத்தில் முக்கியமான ‘Exciting’ அறிவிப்பு வெளிவர இருக்கிறது என்று பதிவிட்டிருந்தது.
தலைவர் 170 அல்லது விடாமுயற்சி Update ஆக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக “நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். சினிமாத்துறையில் இயக்குநராக ஜேசன் சஞ்சய் வெற்றி பெற வாழ்த்துகிறோம்” என லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தது .

இதைத்தான், தனது தந்தையை தொடர்ந்து திரையுலகில் சஞ்சய் கால்பதிக்கிறார் என்று சூசகமாக The Lion King படத்தின் சிம்பா வீடியோவை முன்னதாக பதிவிட்டு குறிப்பிட்டது லைகா. ஜேசன் சஞ்சய் திரைக்கதை இயக்கம் பற்றிய படிப்புகள் படித்துள்ளார். சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். விஜய்யின் வேட்டைக்காரன் படத்தின் பாடல் காட்சியில் நடித்திருந்தார்.
எனவே அவர் திரையுலகிற்கு வரப்போகிறார் என்று அனைவரும் அறிந்த நிலையில், எப்படி அறிமுகமாகப் போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது. இப்பொழுது இயக்குநராக தான் அறிமுகம் ஆகிறார் என்பது உறுதியாகியுள்ளது. சஞ்சய், தனது முதல் படத்தை லைகா நிறுவனதிற்காக இயக்கும் நிலையில் யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இப்பொழுது அதிகரித்துள்ளது .