பொதுவா நிதானமும் பொறுமையும் தான் வெற்றியைத் தரும்-னு சொல்லுவாங்க. அது ஒரு வகையில உண்மைனாலும் ஒரு சிலருக்கு அது ஒத்து வராது. அப்படிப்பட்ட ஒருத்தர் தான் இந்த கதைக்குள்ள இருக்காரு. கிரிக்கெட்-ல பொறுமைக்கு எடுத்துக்காட்டா பல வீரர்கள் இருக்க மாதிரி ஆக்ரோஷத்துக்கும் பஞ்சமே இல்லாம இருக்காங்க. அதுல ஒருத்தர் தான் பாஜி-னு எல்லாராலயும் செல்லமா அழைக்கப்படுற ஹர்பாஜன் சிங்.
பஞ்சாப் மாநிலத்துல பிறந்த இவரு 5 சகோதரிகளுக்கு சகோதரனா இருக்க இவரோட வீட்டுல இவருக்கு செல்லம் அதிகமாவே இருக்கு. சின்ன வயசுல சுனில் கவாஸ்கர்-ஓட பேட்டிங்-ஐ பார்த்து தானும் ஒரு பேட்ஸ்மேன் ஆகணும்-னு ஆசைப்பட்டு ராத்திரி பகல்-னு கடினமா உழைக்குறாரு. எல்லாம் சரியா போயிட்டு இருந்த நேரத்துல அவரோட பயிற்சியாளர் காலமாகுறாரு.
வேற ஒரு பயிற்சியாளர்-க்கு கீழ பயிற்சி எடுக்க வேண்டிய நிலை. அந்த நேரம்-னு பார்த்து அவரோட பயிற்சியாளர் அவரோட விரல்கள் பெருசா இருக்குறத கவனிச்சு அவருக்கு சூழல் பந்துவீச்சு தான் நல்லா வரும்-னு அழுத்தமா சொல்ல… பறிச்சியாளர் சொல்ல தட்டக்கூடாதுனு பேட்ஸ்மேன் பாஜி அப்போ தான் சுழற்பந்து வீச்சாளரா ஆகுறாரு.
அங்க ஆரம்பிச்ச அவரோட பயணம் முதல் தரப்பு போட்டிகள்-ல அற்புதமா இருந்தாலும் ஏதோ சில காரணங்களுக்காக அவரால தேசிய அணியில அவ்ளோ சீக்கிரமா உள்ள வரவே முடியல. இந்த நேரத்துல ஒரு உள்ளூர் விளையாட்டு-ல நடுவரை திட்டுனதுனால அந்த காலகட்டத்துல கிரிக்கெட்-ல அவரோட நடத்தையால வாய்ப்பு கிடைக்காம இருந்து தன்னோட அப்பாவும் அந்த நேரத்துல காலமானதால 19-20 வயசுலயே குடும்பத்த சுமக்க வேண்டிய நிலை வந்துச்சு.
இதனால அமெரிக்கா-ல சர்தார்கள் நிறைய பேரு லாரி ஒட்டுறத கேள்விப் பட்டு தானும் ஒரு ஓட்டுனரா போகலாம்-னு முடிவு பண்ணப்போ அவரோட சகோதரிகள் அவர தடுக்க இன்னும் ஒரு முறை முயற்சி பண்ணேன்னு சொல்ல, அந்த கடைசி முயற்சி இந்திய கேப்டன் கங்குலி கண்ணுல பட அப்படி தான் பாஜி வந்தாரு நம்ம கிரிக்கெட் உலகத்துல.
ஒரு கிரிக்கெட் போட்டில ஆசியா கோப்பை இறுதிப் போட்டில பாகிஸ்தான் அணியோட அக்தர், பாஜி-யை ஏதோ சொல்லி கோவப்படுத்த அந்த கோவத்த தன்னோட பேட்-ல காமிச்சு Six அடிச்சி ஜெயிக்க வைப்பாரு பாருங்க, நெஜமாவே Singh is King தாங்க.