Cinema News Stories

21 Years of ‘Whistle’

90s Kids வாழ்க்கைல இன்னும் எத்தனை வருஷங்கள் ஆனாலும் அவங்களால மறக்க முடியாத அளவுக்கு பயத்த காட்டின பல பேய் படங்கள் இருக்கலாம். ஆனா படத்தோட கிளைமாக்ஸ் வரைக்கும் நாகா நாகானு ஒவ்வொரு சீன் வரும்போதும் பக்கத்துல இருக்கவங்கள கூட பாத்து பயப்புடுற அளவுக்கு மிரட்டிவிட்ட படம் தான் விசில். 

இப்ப வர பேய் படங்களை பார்த்த அட என்னங்க சும்ம பேசிட்டே இருக்கீங்க பேய்ய சீக்கிரம் வர சொல்லுங்கனு நாமலே பேய்க்காக காத்திட்டு இருக்கோம் அந்தளவு பேய்களை நாம காமெடியாவும் , காதலாவும் பாக்க ஆரம்பிச்சிட்டோம். ஆனா விசில் படத்த பல நூறு முறை பார்த்த 90s kids இப்ப அந்த படத்த பார்த்தா கூட நாகா சீன் வரும்போது  ஆலண்டு போய்டுவோம். 

விசில் படத்த சமீபத்துல வந்த The Legend படத்தோட இயக்குனர்கள் ஜேடி ஜெரி தான் எடுத்தாங்க, ஹீரோவா விக்ரமாதித்யா, ஹீரோயினா ஷெரின், காயத்திரி ரகுராம் நடிச்சிருப்பாங்க. ஒரு முக்கோண காதல் கதைகளமும் படத்துல இருக்கும், பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை விவேக் காமெடி, இதயத்துடிப்ப மூணு மடங்கா துடிக்க வைக்கிற திகில் சீன் எல்லாம் கலந்த கலவை தான் விசில்.

ஒரு காலேஜ்ல ஜாலிய வைப் பண்ணிட்டு இருக்க friends gangல தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் இருக்காங்க. ஒரு நாள் அந்த காலேஜ் professor அவங்க studentsக்கு நாகா அப்படின்ற ஒரு கதைய சொல்றாரு, அவங்க காலேஜ் இருக்க இடம் கூட அந்த நாகாவ புதைச்ச இடம் தான்னு சொல்லும்போது நம்ம ஹீரோ friends gang அதெல்லாம் கட்டுக்கதைனு கலாய்க்குறாங்க. 

அதுக்கப்புறம் ஒவ்வொரு நாளும் அந்த gangல இருக்க ஒவ்வொருத்தரா வித்தியாசமான முறைல இறக்குறாங்க. அவங்களையெல்லாம் கொலை செஞ்சது நாகா. நாகா கொலை செய்யும் போது அந்த மாஸ்க், கோடாரி, கருப்பு ட்ரஸ் இதெல்லாம் பார்த்து  பயப்புடாதவங்க கூட டி. இமான் பின்னணி இசைல பயந்து அலறி ஓடிருவாங்க

காலேஜ் ஹாஸ்டல், காலேஜ் culturals dayல, காலேஜ் தாண்டி வெளிய காட்டுக்குள்ள இப்படி பல இடங்கள்ல கொலை நடக்கும், முக்கியமா ஒரு பொண்ணு கார்ல பெட்ரோல் போட்டுட்டு பங்க்லருந்து கிளம்பும்போது, அங்க வேலை செய்யுற ஒருத்தர் ஹேய்ய்ய் பொண்ணு உன் கார்ல யாரோ இருக்காங்கனு சொன்ன அப்பறம் பின்னாடி சீட்லருந்து நாகா வந்து கொலை பண்ணுற சீன் நமக்கு கொலை நடுங்கிடும்.

இப்படி தொடர்ந்து கொலைகள் நடக்க எல்லாருக்கும் நாகா மேல பயம் வந்திடும்,  இந்த நாகா கதைய சொன்ன professor லிவிங்ஸ்டன் தான், ஒரு வேலை நாகாவா வந்து எல்லாரையும் கொலை பண்ணுறாரோனு சிலருக்கு அவர் மேல சந்தேகம் வரும். ஆனா கதைல கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தான் செம்ம ட்விஸ்ட் வரும். யாரும்  எதிர்பார்த்து இருக்கமாட்டோம் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு. 

விசில் படத்துல இன்னொரு பெரிய பலம் விவேக் காமெடி, கரண்ட் ஷாக் அடிச்ச அப்பறம் பொண்ணுங்க மனசுல பேசுறது கேக்கும், விலங்குகள் மனசுல பேசுறது கேக்கும், கடைசில மோப்பம் பிடிக்குற சக்தி வரை எல்லாம் வந்திடும். நாகா பண்ற கொலைகளை பார்த்து பயப்புடுற நமக்கு அப்ப அப்ப இந்த காமெடி ட்ராக் தான் ஆறுதலா இருக்கும். 

இன்னைக்கு வரை நாகான்று பெயர கேட்டாலோ , டி இமான் இசைல வந்த நாகா bgm கேட்டாலோ 90s kids எல்லாருக்கும் ஒரு தனி பயமிருக்க தான் செய்யும். டி இமான் இசைல வந்த அழகிய அசுரா பாட்ட இப்ப கேட்டாலும் செம்ம வைப் தரும்.இதுவரை நான் விசில் படம் பார்த்ததே இல்லைனு யாரும் இருக்கீங்கனா கண்டிப்பா பாருங்க, அப்படியே விசில் படத்த தியேட்டர்ல ரீரிலீஸ் பண்ணாங்கனா இன்னும் நல்லா இருக்கும், கில்லி ரீரிலீஸ் வசூலை கூட முறியடிக்க வாய்ப்பிருக்கு. 

 Eagerly wait for Naaga

Article By RJ SRINI

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.