Cinema News Stories

காவல்துறை அதிகாரியாகும் நகுல்!

நடிகர் நகுல் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘நிற்க அதற்கு தக’ என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ப்ரஜின் நடிப்பில் வெளியான D3 திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் பாலாஜியின், 2வது திரைப்படம் இது. ப்ரஜின் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த D3 திரைப்படம் ஒரு பக்கா க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது.

படத்திற்கான வரவேற்பு குறைவாக இருந்தாலும், படத்தின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் நேர்மறையாகவே இருந்தது. அதே போல் தற்போது நகுல் நடிக்கும் ’நிற்க அதற்கு தக’ திரைப்படமும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையாகவே உருவாகிறது.

நகுல் ஏற்கும் அத்தனை வேடங்களையும் சிறப்பாக செய்யக் கூடிய நடிகர், எனவே காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நிச்சயம் அனைவரையும் கவர்ந்து விடுவார். அதே போல் இயக்குநர் பாலாஜிக்கும் 2வது படம் என்பதால் முதல் படத்தில் இருந்த பிரச்னைகள் இருக்காது.

தற்போது திருநெல்வேலியில் படப்பிடிப்புகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த அப்டேட்டுகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Article By MaNo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.