கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட்டிலும் தனுஷ் பட்டையை கிளப்பி வருகிறார். ஹிமான்ஷி ஷர்மா இயக்கத்தில் தனுஷும் அக்ஷய் குமாரும் இணைந்து நடித்துள்ள “ஆத்ராங்கி ரே” எனும் பாலிவுட் திரைப்படத்தின் டிரைலர் தற்போது Youtube-ல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷ், சாரா அலி கான், அக்ஷய் குமார், முஹம்மது ஜீஷன், டிம்பிள் ஹயதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ரஹ்மான் அவர்கள் பாலிவுட்டில் இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள ஆத்ராங்கி ரே டிரைலர் வீடியோவில் தனுஷ் சில தமிழ் வசனங்களை பேசுகிறார். ஹிந்தி திரைப்படத்தில் தனுஷ் பேசும் தமிழ் வசனங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் 2020 ஆம் ஆண்டு முதலே நடைபெறத் தொடங்கியது.
இப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக திட்டமிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி ஆத்ராங்கி ரே OTT தளத்தில் உலகெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் இருந்தே தனுஷ் ரசிகர்கள் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு trailer-ஐ பகிர்ந்து வருகின்றனர்.
ஆத்ராங்கி ரே திரைப்படத்தின் trailer-ஐ கீழே காணுங்கள்.