அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தின் டிரைலர் நேற்று Youtube-ல் வெளியாகி Trend ஆகி வருகிறது. இப்படம் விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடிக்கும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மனதில் தனி இடம் உள்ளது. அவர் ஏற்று நடிக்கும் கதை களங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கக் கூடும். அந்தவகையில் பார்டர் திரைப்படத்தில் ராணுவ வீரராக அருண்விஜய் நடித்துள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து ரெஜினா கெஸன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியான டிரைலரை வைத்து பார்க்கும்போது தேசப்பற்று மிக்க ஒரு அதிகாரி தனக்கு வரும் சவால்களையும் பிரச்சினைகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதை மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. இப்படத்தில் Mass ஆன ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருப்பது போல தெரிகிறது.
டிரைலர் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. கதைக் களத்திற்கு தேவையான உடற் கட்டமைப்பையும் தோற்றத்தையும் அருண்விஜய் பெற்றிருக்கிறார் என்பதை டிரைலரை பார்க்கும்போது நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
- Harris Jayaraj – மனசுக்கு பிடிச்ச மெலடி மாஸ்டர்
- 2025 Feel Good Tamil Movies List
- கிரிக்கெட்டின் வரலாற்றை திறந்தது இந்தியா மகளிர் அணி
- சாண்டா கிளாஸ் Aka கிறிஸ்துமஸ் தாத்தா
- பஜன் பாடல்கள்
பார்டர் திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படத்தின் டிரைலரை கீழே காணுங்கள்.

