பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக சிம்புவின் மாநாடு இன்று திரைக்களம் கண்டுள்ளது. நேற்று இரவு வரை படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் இன்று காலை திட்டமிட்டபடியே உலகெங்கும் மாநாடு திரைப்படம் வெளியாகியுள்ளது.
சிலம்பரசன் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் அவரது Comeback-ற்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட மாநாடு திரைப்படம் சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த comeback-ஐ கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி மகேந்திரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிம்புவின் மிகவும் favorite-ஆன இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இன்று முதல் இப்படம் உலகெங்கும் வெளியாகியுள்ள நிலையில் சிம்பு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் மாநாடு திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் வாழ்த்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.தமன், “சிம்புவின் நிறுத்த முடியாத நல்ல நேரம் இன்று முதல் ஆரம்பமாகிறது. எனது நண்பனுக்கு வாழ்த்துக்கள்” என ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மாநாடு திரைப்படம் அனைத்து Record-களையும் முறியடிக்கட்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள், மொத்த மாநாடு படக்குழுவுக்கு ஒரு பெரிய “All the best” கூறி, இப்படம் நிச்சயம் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களுக்கு விருந்தாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கோலிவுட்டில் மாபெரும் வெற்றி படமான ‘டாக்டர்’ திரைப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் ஒட்டுமொத்த மாநாடு குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, “நான் நிச்சயமாகச் சொல்கிறேன், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
சார்பட்டா நாயகன் ஆர்யா வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் சிலம்பரசனை “டார்லிங்” என குறிப்பிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.
நேற்று இரவு படம் வெளியாவதில் சில குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் படக்குழுவினர் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து இன்று படத்தை வெளியிட்டுள்ளதால் சிம்பு ரசிகர்கள் படக்குழுவினருக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். நிலவி வந்த குழப்பங்கள் நீங்கிய பின்னர் வெங்கட்பிரபு, “கடவுள் இருக்கார்” என ட்வீட் செய்துள்ளார்.
பல தடைகளை தகர்த்து திரையரங்குகளில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.