Cinema News Stories

100 மில்லியன் பெற்ற செல்லம்மா !!!!

சமீபத்தில் நம்மை துள்ளாட்டம் போட வைத்த சூப்பர்ஹிட் பாடல் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல். இப்பாடல் தற்போது Youtube-ல் 100 Million view-களை பெற்று புதிய சாதனை புரிந்துள்ளது. ” SK Fans Happy அண்ணாச்சி ” என்று சொல்லும் விதத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு ஏற்படுவது வழக்கமாகிவிட்ட நிலையில், டாக்டர் திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்திலேயே இருந்து வருகிறது. “எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது” என்று சொல்வது போல செல்லம்மா பாடலின் Lyric வீடியோ வேற Level-ல் ஏற்றி வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த வீடியோவில் இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் கலகலப்பான உரையாடல் இடம்பெற்றிருக்கும். இந்த உரையாடலை காணவே பலரும் இந்த வீடியோவை Repeat mode-ல் காண விரும்புவார்கள். குறிப்பாக ” நான் தானே Producer, அப்போ நான் தான இந்த பாட்டை எழுதணும்” என சிவகார்த்திகேயன் நெல்சனிடம் கூறும் போது “எப்படி கேட்டு Lock பண்றீங்க” என்று நெல்சன் சொல்வது குபீரென நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது.

அனிருத் பாடிக்கொண்டு இருக்கும்போதே சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவது போல செய்யும் லூட்டிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அனிருத்தின் அட்டகாசமான குரலும், ஜோனித்தா காந்தியின் காந்த குரலும் என்றே சொல்லலாம். பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வரும் இப்பாடல் பலரின் Caller Tune ஆகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் Peppy (துள்ளித் திரிய வைக்கும் ) வரிகள், அனிருத்-ன் Peppy குரலுக்கு ஏற்ப அமைந்து இந்த ஆண்டின் சிறந்த Peppy Number-ஐ Deliver செய்துள்ளது என்பதில் சந்தேகம் வேண்டாம். “டாக்டர்” திரைப்படமும் இப்பாடலை போலவே வெறித்தனமான வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

alex lew