90’s kids ah நீங்க? அப்போ கண்டிப்பா டைரக்டர் விக்ரமன் படங்கள் உங்கள impress பண்ணிருக்கும். தமிழ் சினிமால தரமான யதார்த்தமான படங்கள் கொடுக்குற Director’s list-ல நம்ம விக்ரமன் தான் டாப்.
சின்ன வயசுல இருந்தே சினிமா மேல அதிகப்படியான ஆர்வம் இயக்குனர் விக்ரமனுக்கு இருந்திருக்கு. தினசரி school போயிட்டு வந்ததும் ஒரு படம் பாத்துட்டு தான் தூங்க போவாங்களாம். அந்த தாக்கம் தான் அவரு direction field-க்கு வர காரணமா இருந்துருக்கு. எம்.ஜி.ஆர் படங்களுக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுத்து பாப்பாங்களாம்.
ஆனா Director ஆகணும் ஆசை வந்தது இயக்குனர் பாரதிராஜா அவர்களுடைய படங்கள் பார்த்துதானு சொல்லிருக்காங்க. விக்ரமனோட முதல் படம் ‘புது வசந்தம்’ நிறைய அவார்ட்ஸ் வாங்கி குடுத்துச்சு. அதுக்கு அடுத்து ஒரு மிகப் பெரிய வெற்றி கொடுத்தது எனக்கும் உங்களுக்கும் பிடிச்ச ‘பூவே உனக்காக’ படம் தான். சும்மா இல்லங்க 270 நாட்கள் ஓடின படம்.

இப்போ வரைக்கும் பேசப்படுதுனா அதுக்கு காரணம் நம்ம எதிர்பார்க்காத climax தான். ஆண், பெண் நட்பு இப்போ ரொம்ப casual ஆகிடுச்சு. ஆனா 90’s-ல இயக்குனர் விக்ரமன் அவரோட படங்கள்ல ரொம்ப அழகா கையாண்டிருப்பாரு. ஏன் ஓடுது, எதுக்கு ஓடுதுனு, தெரியாத அளவுக்கு ‘சூரியவம்சம்’ படம் மக்களால் நேசிக்கப்படும்னு படம் எடுக்கும் போதே விக்ரமன், தயாரிப்பாளர் R.B.Choudry கிட்ட சொன்னாராம்.
இப்போ அதே மாதிரி upcoming generations கூட சூரிய வம்சம் படத்த கொண்டாடுறாங்க. அவங்க அம்மா செய்யுற இட்லி உப்மா ரொம்ப நல்லாருக்குமாம். அதனால தான் சூரிய வம்சம் படத்துல இட்லி உப்மா சீன் வச்சங்களாம். இவரோட ‘வானத்தைப் போல’ படத்துக்கு சிறந்த மனமகிழ்ச்சி தரும் பிரபல திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைச்சுது. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.
சரி இப்போ ஏன் அவர பத்தி எவ்ளோ பேசுறேனு யோசிக்குறீங்களா? அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல தான்.

தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக நீங்கா இடம்பிடித்திருக்கும் இயக்குநர் விக்ரமனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.