ஹீரோக்களுக்கு திரைக்கதை எழுதாதீர்கள். நல்ல திரைக்கதைகளை எழுதுவதன் மூலம் நீங்கள் ஹீரோ ஆகலாம் என்றவர் இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன்.

1973-ல் கேரளாவில் பிறந்தாலும் வளர்த்தது படித்தது எல்லாம் தமிழகத்தில் தான். பிரீத்தி மேனன் என்பவரை மணந்து கொண்ட கவுதமிற்கு 3 மகன்கள் உள்ளனர்.
காதலை விண்ணை தாண்டி வரும் மின்னலாகவும், திகிலை நடுநிசி நாயகவும், ஆக்சனை என்னை அறிந்தால் என வேட்டையாடி விளையாடும் வித்தைகளை தனது திரைப்படங்களில் புரிபவர் கவுதம் வாசுதேவ் மேனன்.

தமிழ் சினிமாவின் பல பரிமாணங்களில் வெற்றி பெற்ற இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.. இவரின் திரைப்படங்களில் ஹீரோக்கள் யார்வேனாலும் இருக்கலாம் ஆனால் அந்த கதையின் ஹீரோ, தான் என சொல்லி கொள்வதிலும் அதை ரசிகர்கள் கொண்டாடுவதும் கவுதமின் டைரக்டர் டச்…
அவரின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரின் வாழ்வில் கடந்து சென்ற கதாபாத்திரங்கள் தான் . படங்களில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெறுவதும் பாடல்களே இல்லாமல் அந்த படத்தை மக்கள் மனதில் முணுமுணுக்க வைப்பவர்.
கௌதம் மேனன் இயக்கதில் அதிக பாடல்களை கொண்ட படம் ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் 2012-ல் வெளிவந்த நீ தானே என் பொன்வசந்தம் படம் தான் . இதில் மொத்தம் எட்டு பாடல்கள் உள்ளது.மேலும் பாடல்களே இல்லாமல் வெளிவந்த படம் 2011 ஆண்டில் வெளிவந்த நடுநிசி நாய்கள் திரைப்படமாகும்.

சிறந்த நடிகராகவும் வலம் வரும் இவர் திரைப்படத்தின் மூலம் இந்த சமூகத்தின் மாறுதல்களை படம் பிடித்து காட்டுபவர்… காதலர்கள் காதலிக்கும் காதல் கதையையும், நேர்மை மிகுந்த காவல் துறை கதையையும் கையாளுவதில் இவருக்கு நிகர் இவர் தான்…
ஈடு இணை இல்லாத தரமான இயக்குனர் என்று இவரின் எதார்த்தமான திரை கதாபாத்திரங்களை பார்த்து நாம் கொண்டாடினாலும் , அவரின் எல்லா படங்களிலும் ஏதோ ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தை ஞாபகப்படுவதுதான் ஆச்சர்யம். மேலும் தன் படங்களில் ஹீரோவுக்கு அருகில் வரும் துணை நடிகருக்கும் முக்கியத்துவம் தரும் பாங்கு நிச்சயம் பாராட்டுக்குரியது.

கவுதம் வாசுதேவ் மேனனின் படங்களில் உள்ள பாடல்களுக்கான காட்சியமைப்பும் ரசிகர்களை கவரும் வகையிலே இருக்கும்… அந்த அற்புதங்களை நிகழ்த்துவதில் கவுதம் மேனன் ஒரு நிபுணர்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும் என்பது போல உங்கள் படங்கள் பார்த்து உங்களை பிடிக்கும் கவுதம் மேனன்… சூர்யன் FM ன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் டைரக்டர்…
Script By David and SanthoSh