Cinema News Stories

HIP HOP ஆதி

Happy Birthday Hiphop Tamizha Adhi

நமது திறமைகளை வெளிக்கொணர நமக்கென ஒரு மேடையை உருவாக்க தொழில்நுட்பம் கொடுத்த ஒரு வாய்ப்பு தான் சமூக ஊடகம். CONTENT CREATERS , STORY TELLERS, INFLUENCERS , என பலரும் புகழின் உச்சிக்கு செல்ல ஒரு பாதையாக இருந்த YOUTUBE சமூக ஊடகம் வழியே INDEPENDENT MUSICIANS தங்கள் கனவுகளை அடைய ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தவர். WESTERN CLASSIC-களில் அதிகம் பழகிய ரசிகர்களுக்கு பாப் இசையையும் ரசித்து கொண்டாடவைத்தவர்களில் இவரும் ஒருவர்.

தமிழ் இசை உலகில் பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்து தனித்துவமான பாதையை உருவாக்கியவர் ஹிப்ஹாப் தமிழா ஆதித்யா. YOUTUBE-ல் தொடங்கிய அவரது இசைப்பயணம் இன்று சினிமா மற்றும் இளைஞர் கலாச்சாரத்தில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.”கிளப்பில மப்புல “வாடி புள்ள வாடி “,”மீசையை முறுக்கு ” போன்ற பாடல்கள் இளைஞர்களை ஈர்த்ததோடு எளிமையான தமிழ் வரிகளால் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்படி மாறின.

சாதாரணமாக தொடங்கிய ஒரு YOUTUBE பயணம் இன்று உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒரு பிராண்டாக வளர்ந்திருக்கிறது. சமூக விழிப்புணர்வு,கலாச்சார பெருமை மற்றும் இளைஞர்களின் தன்னம்பிக்கை ஆகியவற்றை இசை மூலம் எடுத்துரைக்கும் அவரது முயற்சிகள் தமிழ் இசைக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளன.

இசையமைப்பாளர்,ராப்பர்,நடிகர்,இயக்குனர் என பல துறைகளில் திறமையை நிரூபித்த அவர் தமிழ் மொழி மீது உள்ள பற்றையும் தன்னம்பிக்கை கொண்ட வாழ்க்கை நோக்கையும் தனது படைப்புகளில் வெளிப்படுத்துகிறார்.

இந்த பிறந்தநாளில் தமிழ் இசையில் புதுமையை கொண்டு வந்த எல்லா தலைமுறையினரையும் இணைக்கும் கலைஞராக திகழும் ஹிப் ஹாப் தமிழா ஆதித்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Article by- kalaivanan