இன்னைக்கு இருக்க கூடிய இளைஞர்களுக்கு இசை மீதான ஆர்வமும், ரசனையும் இதுக்கு முன்னாடி இருந்த தலைமுறைய விட வித்தியாசமா இருக்குனுதான் சொல்லுனும்.
மெலோடி பாட்டு ,குத்து பாட்டு , கர்நாடக சங்கீதம் இப்படிப்பட்ட இசையை கேட்டு வளர்ந்துவங்க நம்ம பெற்றார்கள்.அடுத்த தலைமுறை இந்த இசையோட சேர்த்து கானா, Rap கேட்டு வளர்ந்தோம். ஆனா இப்போ Rap,Jazz, Western, K POP, Hiphopனு “இசை” தமிழ் சினிமால அடுத்த பரிமாணத்துக்கே போச்சுனு சொல்லலாம்.
அப்படி HIPHOP இசைய தன்னோட அடையாளமா மாத்தி இன்னைக்குயிருக்க ஒவ்வொரு இளைஞர்களோட Inspiration-னா தான் கொங்கு நாட்டின் ம்யூசிக் கிங் HIPHOP தமிழா ஆதி.
பாரதியார் முகத்த தன்னோட Logo-வா வச்சி இப்ப இருக்க தலைமுறை கிட்ட பாரதியார கொண்டுபோய் சேர்த்தது மட்டுமில்லாம , அவருடைய புரட்சி மிகு பாடல் வரிகளை தன்னோட Album song-ல போட்டு அர்த்தம் புரியாத பாடல்களை பாடிட்டு இருந்த இளைஞர்கள அவங்களுக்கு புடிச்ச Rap,Hiphop இசையோட நல்ல தமிழ் வரிகளை பாட வச்ச பெருமை ஹிப்பாப் தமிழா ஆதிய தான் சேரும்.
பலரும் 2011ல வெளியான CLUBல Mabbuல தான் ஹிப்பாப் தமிழா ஆதியோட முதல் பாட்டுனு சொல்லுவீங்க ,ஆமா அது தான் ஆகியோட இசை பயணத்துல ஒரு நல்ல ஆரம்பத்த கொடுத்துச்சு.
ஆனா 2010க்கு முன்னாடியே Vishwaroopam Arambam அப்படி ஒரு பாட்ட ஹிப்பாப் ஆதி பண்ணியிருக்காரு.2011ல Election comissionகாக எழுவோம் வா இப்படி ஒரு election anthem பண்ணியிருக்காரு. இந்த வீடியோக்கள் இன்னும் யூடியூப்ல இருக்கு.Hiphop thamizha – ஆதி மற்றும் அவரோட நண்பர் ஜீவாவோட சேர்ந்து தான் உருவாச்சு.
2011ல வந்த CLUBLA MABBULA கொடுத்த ஹிட் அவரோட இசை பயணத்துக்கு மிகப்பெரிய ஆரம்பமா இருந்துச்சு. அதுக்கப்பறம் இந்தியாவோட முதல் தமிழ் HIPHOP ALBUM August 17,2012ல வெளியாகுது. SMARTPHONE பெருசா இல்லாத காலத்துல கூட school ,college students கிட்ட ஹிப்பாப் ஆதியோட songs பயங்கர ஹிட் “இறைவா எனக்கொரு வரம் தா ,வாடி புள்ள வாடி இதெல்லாம் இப்பவும் பலரோட Playlistல இருக்கும்”
அடுத்து தன்னோட albums ஒருபக்கம், தமிழ் சினிமால rap பாடகரா மறுபக்கம்னு ஹிப்பாப் ஆதியோட பயணம் இருந்துச்சு.அப்படி அவர் பாடின பாடல்கள்
நான் படத்துல வர தப்பெல்லாம் தப்பெயில்லை,
எதிர்நீச்சல் படத்தோட Title Track
கத்தி படத்துல வர பக்கம் வந்து.
வணக்கம் சென்னை படத்துல வர Chennai City Gangster.
இது போல பல பாடல்கள் பாடின ஆதிக்கு முதன் முதலா இசையமைப்பாளரா வாய்ப்பு தந்தது டைரக்டர் சுந்தர்.சி 2015ல வெளியான ஆம்பள படம் மூலமா தமிழ் சினிமால தன்னோட இசை தடத்த பதிச்சாரு ஹிப்பாப் ஆதி. படத்துல வர ஒவ்வொரு பாட்டும் All time hit -னு சொல்ற அளவுக்கு எல்லாரும் ஆதிய கொண்டாடினாங்க.
அடுத்த சுந்தர்.சி ஹிப்பாப் ஆதி combo அரண்மனை 2 & 4, கலகலப்பு 2, Action, அடுத்து வெளியாக இருக்க புருஷன் படம் வர தொடரது. இதுல ஹிப்பாப் ஆதியா ஹீரோவ அறிமுகம் படுத்தினதும் சுந்தர்.சி குஷ்புவோட AVNI கம்பேனி தான்.
2017வது மீசைய முறுக்கு படம் மூலமா கதாநாயகனா ஹிப்பாப் ஆதி அறிமுகமாகுறாரு, ஆனா ஒரு புது ஹீரோ படம் போல இல்லாம மக்கள் இந்த படத்த பயங்கரமா கொண்டாடினாங்க.
குறிப்பா *தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு * இந்த வசனம் பலர motivate பண்ற sloganனா மாறிடுச்சுனே சொல்லலாம்.
இப்ப கூட மீசைய முறுக்கு 2 உருவாகிட்டு இருக்கு.
இதுகப்பறம் நட்பே துணை,நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம்,அன்பறிவு,வீரன், PT SIR,கனகவேல் காக்க,கடைசி உலகப்போர் இப்படி பல படங்களை தானே இயக்கி நடிச்சும் ,மற்ற இயக்குனர்கள் படத்துல நடிச்சும் தன்ன இளைஞர்களுக்கு பிடிச்ச ஹீரோவா மாத்திக்கிட்டாரு ஹிப்பாப் ஆதி. இவரோட படம் வந்தா minimum guaranteeனு தியேட்டர் ஓனர்களும் ஆதி படங்களை தொடர்ந்து வாங்கி ரிலீஸ் பண்றாங்க.
இப்படி கதாநாயகனா ஆன அப்பறம் , டைரக்டரா ,இசையமைப்பாளரா தொடராத பலருக்கு மத்தில ஹிப்பாப் ஆதி தொடர்ந்து இசையமைச்சு ஹீட் கொடுத்தாரு.அதுல வந்த சில All time blockbuster Albumsனா
தனிஒருவன் ,இன்று நேற்று நாளை ,கதகளி,கவண்,இமைக்கா நொடிகள் இப்படி சொல்லிட்டே போகலாம்.
இந்த படங்களுக்கு உயிர் கொடுத்ததே ஹிப்பாப் ஆதி இசை தான்.
இவரோட இசைப்பயணத்துல முக்கிய பாடலா அமைஞ்சது டக்குரு டக்குரு பாடல்.
ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்துல இளைஞர்களோட எழுச்சிக்கு இந்த பாட்டு ஒரு முக்கிய காரணமா இருந்துச்சு.
இன்னைக்கு இளைஞர்கள் மத்தியில பெரும் வரவேற்பை பெற்றுயிருக்க கூடிய CONCERT கலாச்சாரத்துலையும் தன்னோட தடத்த பதிச்சு பல நாடுகள் பயணிச்சு ஜெயிச்சுகிட்டே இருக்காரு ஹிப்பாப் ஆதி
இப்ப மக்கள் ஹிப்பாப் ஆதிகிட்ட எதிர் பாக்குறது வருஷத்துக்கு நாலு படமாச்சம் ம்யூசிக் பண்ணுங்க !ஒரு ரசிகனா நானும் அதை தான் கேக்குறேன் ஆதினா…!
இன்னும் தமிழ் சினிமால பல பாடல்கள் தந்து மேலும் பல உயரத்த தொட்டு தமிழையும் தமிழனையும் பெருமை படவைக்கும் படைப்புகள ஹிப்பாப் தமிழா ஆதி கொடுக்க சூரியன் FMன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ARTICLE BY RJ SRINI

