சுஜாதா மோகன் இந்திய திரைப்பட இசைத்துறையில் மிகவும் மதிப்புமிக்க பின்னணிப் பாடகிகளில் ஒருவர். இவர் 31 மார்ச் 1963 அன்று கொச்சின் நகரில் பிறந்தார்.
சிறுவயதிலேயே இசையில் திறமை காட்டிய இவர் கே.ஜே யேசுதாஸ் உடன் மேடை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினர். பள்ளி வயதிலேயே முதல் பாடலை பதிவு செய்தார் பின்னர் தென்னிந்திய இசையுலகில் தனக்கென ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டார்.
தனது வசீகரமான குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 4000 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார்.இவரின் மாயக்குரலின் ஜாலம் தமிழில் 90களை ஆட்சி செய்தது என்றே கூறலாம். தமிழில் இவரின் ஆரம்ப கால பாடல்கள் இளையராஜா இசையில் வந்தன. ஆனால் தேசிய அளவில் பெரிய வரவேற்பை பெற்றது எ.ஆர்.ரஹமான் இசையில் வெளி வந்த “புது வெள்ளை மழை” பாடல்.இந்தப் பாடல் மூலம் இவரின் குரல் இந்திய அளவில் பிரபலமானது.
நூற்றுக்கணக்கான பாடல்களை 90களின் ஆரம்பம் முதல் இறுதி வரை பாடி அசத்தியிருக்கிறார். ‘புதிய முகம்’ படத்தில் வரும் நேற்று இல்லாத மாற்றம் என்ற பாடல் அப்படியே காதல் ரசம் சொட்ட சொட்ட பாடி காதலை தன் குரலால் அள்ளி தந்து இருப்பார்.
2000த்தின் ஆரம்பத்திலும் இவரின் மௌவுசு குறையவில்லை என்பதற்கு சான்றாக வந்த. 2001 ஆம் ஆண்டு வெளி வந்த தில் படத்தில் வரும் உன் சமையல் அறையில் பாடல். இவரது மாயக்குரலின் ஜாலம் 2000த்தின் ஆரம்பம் முதல் 2008 வரையிலும் பல சிறந்த பாடல்களை பாடி கொடி கட்டி பறந்தார் சுஜாதா.
சுஜாதா தமிழை பொருத்தவரையில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் தான் அதிகபடியான பாடல்களை பாடியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் வரும் புது வெள்ளை மழை என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சை தன் வசப்படுத்தினார் சுஜாதா. தேவாவின் இசையிலும் பல பாடல்களை பாடியிருக்கிறார். இந்த நேரத்தில் பல ஹிட் பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான்.
சுஜாதா மோகன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளங்கள் எங்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
Article By – Kalaivaanan

