Cinema News Specials Stories

ஆசை ஆசையாய் எப்போதும் நம் மனதில் இருக்கும் ஜீவா!

நம்ம எல்லாருக்கும் திரைப்படங்கள் பார்க்க ரொம்பவே புடிக்கும். அதுலயும் ஒரு சில நடிகர்களோட கதாபாத்திரங்கள் நம்ம ஆள் மனசுக்குள்ள எப்பயுமே இருக்குங்க.

அப்டி உதாரணத்துக்கு சொல்லனும்னா நம்ம ஜீவா அவர்களுடைய ராம் படத்துல இருந்து ராம் கதாபாத்திரமா இருக்கட்டும், சிவா மனசுல சக்தி படத்துல இருந்து சிவா கதாபாத்திரமா இருக்கட்டும், கோ படத்துல இருந்து அஸ்வின் கதாபாத்திரமா இருக்கட்டும்… இப்டி நம்ம ஆள் மனச தொட்ட நடிகர்களில் கண்டிப்பா எப்பவும் இருப்பாரு நம்ம நடிகர் ஜீவா.

தன் பையன் தன்ன விட பெரியவனா வரணும்னு நினச்ச அப்பா தான் தயாரிப்பாளர் R. B. Choudary. அவருடைய நான்காவது மகன் மேல கொஞ்சம் எக்ஸ்ட்ரா அக்கறையும் வச்சிருந்தார். அதனாலயே அவரு நம்ம ஜீவா அவர்களை தன்னோட 50வது படமான ஆசை ஆசையாய் படத்துல ஹீரோவா நடிக்க வச்சி திரை உலகத்துக்கு ஜீவா-ன்ற ஒரு ரத்தினத்தை கொடுத்தாரு.

ஜீவா அவர்களுடைய பெயர் அமர் Choudary, சினிமாவிற்காக பெயர் மாற்றம் பண்ண இவரு… Cinema Life குள்ள வந்த உடனே மாறியது பெயர் மட்டும் இல்ல… அவரோட வாழ்க்கையும் தான்.

ஒரு நடிகன் நல்லா நடிக்குறாருன்றத தாண்டி, வேல பாக்குறவங்க கூட பழகுற விதம், நடந்துக்குற விதம் தான் அவங்களோட தரத்தை நிர்ணயிக்கும். அந்த வகைல நம்ம ஜீவா அவர்கள் தமிழ் சினிமால நல்ல நடிகரா வளர்ந்ததை தாண்டி, நல்ல மனிதராவும் இருந்தாரு.

ஒருத்தர் தனக்கு புடிச்ச வேலைய பாக்கும்போது கண்டிப்பா விரும்பி அந்த வேலைக்காக நெறய மெனக்கெட்டு தான் பண்ணுவாங்க. அதே போல நம்ம ஜீவா அவர்களும் அவர் ஏற்று நடிக்குற கதாபாத்திரங்களுக்கு அதிகமா உழைச்சு அந்த கதாபாத்திரத்த சிறப்பா பண்ணுவாரு.

அவர் நடிப்புல வந்த ராம் படத்துக்காக நம்ம ஜீவா நெறய பண்ணிருக்காரு, உடல் ரீதியா மட்டுமில்லாமா மனரீதியாவும் நம்ம ஜீவா இந்த படத்துல தன்னை வருத்திருக்காரு. இன்னும் சொல்லப்போனா அவரு நடிக்கலங்க வாழ்ந்துருக்காருனு தான் சொல்லனும். அப்படி தான் கற்றது தமிழ் கதாபாத்திரமும்.

அவர மாறி நெறய நடிகர்கள் நம்ம தமிழ் சினிமால உருவாவது நம்ம தமிழ் சினிமாக்கு தான் பெருமை.

Article By RJ Jae

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.