Natural-அ நம்ம எல்லாருக்கும் சினிமா மேல ஒரு காதல் இருக்கும். அத நம்ம யாராலும் தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட அந்த Natural காதல் தான் இங்க ஒரு Natural ஸ்டார உருவாக்கிருக்கு. ஒரு சில வருசத்துக்கு முன்னாடி ஹைதராபாத்ல ஒரு சின்ன பையனுக்கு சினிமா மேல கணக்கில்லாத அளவுக்கு காதல்.
வார கடைசியானா அவர் வீட்டு பக்கத்துல இருக்க Theatre-க்கு படம் பாக்க போயிருவாரு. ஆனா அப்போ அந்த பயனுக்கு தெரியாது அவர் படங்கள் வார கடைசில Housefull ஆகப்போதுனு. இதுக்கு முன்னாடி சினிமால இருக்குறவங்க கிட்ட எது உங்கள கவர்ந்துச்சு சினிமாலன்னு கேட்டா, ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ இல்லனா, ஆக்ஷன் படத்தோட பெயரை சொல்லுவாங்க. ஆனா இந்த பையனுக்கு அம்மன் படத்த பாத்து தான் சினிமால ஆர்வம் வந்துருக்கு.

இவ்ளோ சொல்லிட்டு அவர் பெயர் சொல்லாம இருந்தா எப்புடி அவர் தான் Ghanta Naveen Babu. பெயர் புதுசா இருக்கேனு யோசிக்காதிங்க அவரோட ஒரிஜினல் பெயர் தான் அது. யாரு நவீன் பாபு? நவீன் பாபு-க்கு இயக்குனர் மணிரத்னம் படங்கள் ரொம்ப பிடிக்கும். தளபதி அவரோட Favorite. ஒரு இயக்குனர் சிந்தனை தான் ஒரு படமா உருவாகுதுனு தெரிஞ்ச அந்த பையனுக்கு இயக்குனர் ஆகணும்னு ஆசை வருது.
படிச்சி முடிச்சிட்டு தெலுங்கு சினிமால 2005-ல வெளியான அலறி புல்லோடு படத்துல துணை இயக்குநரா தன்னோட பயணத்த ஆரம்பிக்குறாரு. அஸ்திரம், தீ மாதிரியான படங்கள்லயும் துணை இயக்குநரா தொடர்ந்துட்டு இருக்குறப்ப ஒரு ரேடியோல ரேடியோ ஜாக்கியா ஒர்க் பண்ண சான்ஸ் கிடைக்குது. அடுத்த ஒரு வருஷம் அங்க ஒர்க் பன்றாரு. அந்த ரேடியோல அவர் பண்ண ஷோ தான் நான்ஸ்டாப் நானி.

இப்போ புரிஞ்சுருக்கும் இவ்ளோ நேரம் நா யாரை பத்தி சொல்லிட்டு இருக்கேனு. ஆமா ஆக்டர் நானி தான். இயக்குனர் ஆசை எப்படி ஹீரோவா மாறுச்சு? இயக்குனர் Mohana Krishna Indraganti அவர் இயக்க போற Ashta Chamma படத்துல நானி அவர்கள செகண்ட் ஹீரோவா நடிக்க வைக்க கதை சொல்றாரு. நானிக்கும் கதை பிடிக்க அவர் நடிக்க ரெடி ஆகுறப்ப இயக்குனர் என்ன நினைச்சாருனு தெரில, நீதான் மெயின் ஹீரோ ,செகண்ட் ஹீரோ-லாம் இல்லனு சொல்றாரு.
ஆக்டர் நானி அதிர்ச்சில நிக்குறதோட, அவரோட ஹீரோ கதை ஸ்டார்ட் ஆகுது. Ashta Chamma ஹிட் ஆகுது, தொடர்ச்சியா படங்கள் நடிக்குறாரு. ஒவ்வொரு ஹீரோ லைப்லையும் ஒரு படம் அவரை அடுத்த படிக்கு எடுத்துட்டு போகும் அப்படி நானிய பான் இந்தியா மேடைக்கு கொண்டு போன படம் தான் ‘நான் ஈ’.

இந்த படத்துக்காக ராஜா மௌலி இவரை கதை சொல்ல கூப்பிடறப்ப அனிமேஷன் படம் அந்த ‘ஈ’க்கு டப்பிங் பண்ணனும் போலனு தான் நினைச்சிட்டு போனாராம் நானி. ஆனா அங்க போனதுக்கு அப்பறம் தான் அவருக்கு தெரிஞ்சுருக்கு அந்த ஈ-ஏ அவர் தான்ன்னு ….
இந்த படம் அவருக்கு தமிழ் சினிமால ரசிகர்களை உருவாக்குச்சு, ஆனா தமிழ் சினிமால இவர் என்ட்ரி 2011-ல வந்த வெப்பம் படத்துலயே ஆரம்பிச்சாச்சு. இவரோட மிடில் கிளாஸ் அப்பாயி, நேனு லோக்கல் மாதிரியான படங்கள்… ஆக்ஷன் ரொமான்டிக் ஹீரோவா ரசிகர்களை கவர்ந்திழுக்க காரணமா இருந்துச்சு Nani’s Gang Leader, ஜெர்ஸி, ஷ்யாம் சிங்கா ராய் மாதிரியான படங்கள் ரசிகர்கள் மனசுல இவர இன்னும் ஆழமா கொண்டு போய் சேர்த்துச்சு.

Jersy படத்துல ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல நானி கத்துற காட்சி வரப்ப லைஃப்ல செகண்ட் சான்ஸ் கிடைக்காதான்னு நினைக்குறவங்களுக்கு, அந்த சான்ஸ் கிடைக்கிறப்ப வர சந்தோசமான எல்லாரோட முகமா தான் நானி முகம் தெரிஞ்சுது. இன்னைக்கு இவர் படங்கள் Theatre-க்கு வர தேதி தான் இவர் ரசிகர்களுக்கு தசரா.
கடைசியா வந்த இவரோட படத்த பத்தி சொல்லனும்னா தனக்காக வந்தவங்களையும், தன்னால வந்தவங்களையும் ஒருத்தர் எவ்ளோ காதலிக்கனும்னு ரொம்ப யதார்த்தமா சொன்ன ஒரு படம் ’ஹாய் நான்னா’. இப்படி, தான் ரொம்ப காதலிக்கிற சினிமா மூலமா மக்கள தன்னை காதலிக்க வச்சாரு நானி.

துணை இயக்குநரா கேமராக்கு பின்னாடி Clap Board அடிச்ச பையனோட முயற்சி, உழைப்பு தான் Screen-க்கு முன்னாடி அவருக்கு பல ஆயிரம் Clap வாங்கி குடுத்துருக்கு. அப்படி பட்ட நானி பிறந்த தினம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இன்று. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகின்ற அதே நேரத்தில் அவருடைய திரை பயணத்தில் பல வெற்றி பெற்று பல உயரம் அவர் அடைய வேண்டும் என்று சூரியன் FM தன் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறது.