Cinema News Stories

“காதல் ரோஜா பூஜா”

பூஜா அப்படின்னு சொல்றத விட… காதல் ரோஜா பூஜான்னு சொன்னா… இப்பவும் நம்ம மனசுல…. டக்குனு… நினைவுக்கு வந்துருவாங்க நடிகை பூஜா குமார்.

2000-த்துல இவங்களோட முதல் தமிழ்படம் “காதல் ரோஜா” வெளியாச்சு… அறிமுக படத்துலயே புதுமுக நடிகை பூஜா நடிப்பு நிறைய பேர் மனசுல இடத்தையும் பிடிச்சுது…. தமிழ் படங்கள் மட்டுமில்லாம, சில ஆங்கில படத்துலயும் நடிப்பு திறமைய வெளிப்படுத்தினாங்க….

2013-ல விஸ்வரூபம் படத்துல இவங்களோட ரீ-என்டீரி மறுபடியும் தமிழ் சினிமாவுல இவங்களுக்கு வரவேற்ப்பு கொடுத்துச்சு… அமெரிக்கால பிறந்தாலும் இந்திய வம்சாவளியான நடிகை பூஜா, நடிப்பு மேல இருந்த ஆர்வம் மொழி மேலயும் இருந்தனால, தமிழ்மொழிய முறையா கத்துக்க தொடங்குனத பல நேர்காணல்ல நடிகை பூஜா பதிவு பண்ணியிருக்காங்க…

அமெரிக்க அழகிப்போட்டில ஜெயிச்சு தயாரிப்பாளரா அடியெடுத்து வச்சு, படிப்படியா நடிகையா விஸ்வரூபமெடுத்து, Tv தொகுப்பாளினி, மாடல்னு பன்முகத்தன்மையோட தன்னோட திறமைய வளர்த்துகிட்ட நடிகை பூஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். க்யூட்டான பேமிலியோட செட்டில் ஆகியிருக்க நடிகை பூஜாகுமார் மீண்டும் சினிமா பயணத்தை தொடரவும் வாழ்த்துக்கள்.

Article By RJ Abi

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.