Cinema News Stories

நம்மை மயக்கிய குரல்

காதல் ததும்ப ததும்ப எழுதி, மனச உருக வைக்குற இசையோட, இவர் குரல்ல பாடல்களை கேட்கும் போது… மறுவார்த்தை பேசாதே! பாடிட்டே இரு… அத கேட்டுட்டே இருனு உள்ளுக்குள்ள தோணும்…

இசைஞானியோட SONGS எப்படி START ஆகுறதுக்கு முன்னாடி வர INTRO MUSIC ல அந்த SONG அ GUESS பண்ணுவோமோ, அதே மாதிரி SID SRIRAM SONGS-ல INTRO ல வர அந்த HUMMING-அ வச்சு GUESS பண்ணிடலாம்.
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அதுல தெரிஞ்ச SID ஓட இசை பயணம் இவருடைய 3 வயசுலயே தொடங்கியது…

2013-ல இவர் பாடிய இந்த முதல் பாடலுக்கு கிடைச்ச வரவேற்பு தமிழ் மட்டும் இல்லாம தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராட்டி ENGLISH-னு எல்லா LANGUAGES-லயும் SUPER DUPER HIT SONGS AH குடுக்க வெச்சுது.

அப்பா மகன் அன்ப சொல்ல குறும்பா குறும்பா வா இருக்கட்டும், அப்பா மகள் காதல சொல்ல கண்ணானே கண்ணே SONG, காதல சொல்ல துடிக்குற HERO-க்கு தள்ளிப்போகாதே எனையும் தள்ளிப்போக சொல்லதேனு நம்மளையும் FEEL பண்ண வெச்சு என்னோடு நீ இருந்தால்னு புலம்பி ஏன் என்னை பிரிந்தாய்னு கேள்வி கேட்டு குழப்புற காதல் பயணத்துக்கு… SID ஓட VOICE, SOULFUL-அ இருக்கும்.

அதுமட்டும் இல்ல, இதுவும் கடந்து போகும்னு ஆறுதல் படுத்தி… என் இனிய தனிமையேனு, தனிமைக்கும் துணை SID SONGS. இப்படி பல தமிழ் பாடல்கள்ல இருக்க ஈர்ப்ப தாண்டி… INKEM INEKEM INEKEM KAVALE.. னு தெலுங்கு SONGS அ VIBE பண்ணதும் உண்டு..

ஒவ்வொரு வருசத்துக்கும் பல HIT SONGS குடுத்து, கடந்த 11 வருடங்களா STAR-ஆ இருக்க SID ஓட இசை பயணம் தொடரட்டும்… இப்படி நம்மை மயக்கிய குரலுக்கு சொந்தக்காரரான சித் ஸ்ரீராம்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

Article By RJ Hasini

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.