Specials Stories

நடிப்பின் நாயகனுக்கு HAPPY BIRTHDAY சொல்லுங்க!

Suriya's new bearded look.
Suriya's new bearded look.

பொதுவா எல்லார் மாதிரி தான் எனக்கும் Actor Surya-வ புடிக்க ஆரம்பிச்சுது. Actually அவர romantic hero னு சொல்லுவாங்க. 1997 ல நேருக்கு நேர் படம் மூலமா அவரோட acting career start ஆச்சு. ஆனா Gautham menon direction ல காக்க காக்க படத்துல ஒரு change over குடுத்தாரு பாருங்க நா மட்டுமில்ல என்ன மாதிரி நிறையபேரு impress ஆகிட்டாங்க.

அதுல அவரு play பண்ணின Asst commissioner  அன்புச்செல்வன் character எல்லாராலும் பேசப்பட்டது. அதுக்கு அப்புறம் அவரு acting ல வந்த படங்கள் எல்லாமே அவரோட நடிப்பு திறமைய வெளிப்படுத்திட்டே இருந்துச்சி  Infact Perazhagan, Ghajini, sillunu oru kadhal னு வருசையா எல்லா படத்துலயும் அவரோட acting ah வேறுபடுத்தி prove பண்ணிட்டே இருந்தாரு.

 நடிப்பையும் தாண்டி அவரு choose பண்ணுற கதைகளும் அவரோட success  க்கு ஒரு காரணம் னு சொல்லலாம். Jai Bhim படத்த நம்ம எல்லாரும் எப்படி கொண்டாடினோம்னு தெரியும்.  Acting   தாண்டி படம் தயாரிப்பிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழ் சினிமாவுக்கு   கருத்துள்ள பல நல்ல கதைகளையும் தயாரிச்சிட்டு இருக்காங்க. Work life and family life ah ரொம்ப perfect ah கையாண்டு வாழ்க்கையோட சுவாரசியத்த அழகா அனுபவிச்சிட்டு இருக்காங்க.

நடிகர் சூர்யா நல்ல திறமையான நடிகர் என்பதை விட நல்ல மனிதரும் கூட,தமிழ்நாடு முழுவதும் நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்து மழையை பொலிந்து வருகின்றனர்.சினிமாவுக்குப் பல நன்மைகளைச் செய்திருப்பதைப் போலவே சமூகத்துக்கும் தொடர்ந்து தொண்டாற்றிவருகிறார். அவர் தொடங்கி நடத்திவரும் ‘அகரம்’ நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் கல்விக் கனவுகளை நனவாக்கியிருக்கிறது.

நிதியுதவியோடு நிற்காமல் கல்வியாளர்களையும் கல்விச் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கி அனைவருக்கும் கல்வி சென்றடைவதை உறுதி செய்வதற்கும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குமான ஒரு இயக்கமாக ‘அகரம்’ தன்னுடைய பணிகளை முன்னெடுத்துவருகிறது,

 இந்த நிலையில் நடிகர் சூர்யா அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அவர் நடித்து வெளிவர தயாராக இருக்கும் கங்குவா திரைப்படத்தின் முதல் பாடலான வெளியாகவுள்ளது,இதன் மூலம் சூர்யா அவர்களின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர். நடிப்பின் நாயகன் சூர்யா அவர்களுக்கு நம் SURYAN FM சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ARTICLE BY RJ SARANYA, TIRUNELVELI.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.