பல வெற்றிகள் சந்தோஷத்தை தரும், சில வெற்றிகள் தான் கொண்டாட்டத்தை தரும். அப்படி நம்ம மொத்த இந்தியாவும் கொண்டாடுன, பல தருணங்களை கொண்டாட வைத்த ஒருவரைப் பற்றின கதை தான் இது.
ஜூலை 07 அதுவுமா இந்த கதையை நீங்க படிக்கும் போது நான் யாரைப் பற்றி சொல்றேனு இந்நேரம் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும். கேப்டன் cool, Mahi-னு பல பேரால அழைக்கப்படுற மஹேந்திர சிங் தோனி தான். எல்லாரும் செல்லமா “தல”-னு சொல்லுவோம். அப்படி அவரை தல-னு கூப்பிட என்ன காரணம்?
அவர் சர்வதேச கிரிக்கெட்ல இருந்து ஓய்வு பெற்று பல வருஷங்கள் ஆகியும் இன்னமும் ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம்? ஏதாச்சும் ஒரு புகைப்படமோ இல்ல ஏதோ ஒரு வீடியோவோ தெரிஞ்சோ தெரியாம வந்தா அந்த நாள் முழுக்க சமூகவலைதளமே ஒரே வார்த்தை தான் சொல்லும் – தோனி!! தோனி!! தோனி!
இந்த ஆர்ப்பரிப்பு வர காரணம் எல்லாரும் பல வருஷமா ஏங்கித் தவிச்ச ஒரு நாள் உலகக் கோப்பையை ஜெயிக்க அவரு காரணமா இருந்ததா? இல்ல யாருமே எதிர்பாக்காத பிரபலமே ஆகாத நேரத்துல சின்ன அணியை வச்சிக்கிட்டு 2007 T20 உலகக் கோப்பையை ஜெயிச்சதா, இல்ல டெஸ்ட் போட்டியில ரொம்பவே பின்தங்கி இருந்த இந்திய அணிய முதல் முதல்ல நம்பர் 01 அணியா மாத்துனாதா?!
இது மாதிரி எண்ணற்ற காரணங்கள் பல இருந்தாலும், அத கொண்டாடின அதே மக்கள் அவர இன்னமும் மனசுல வச்சிக்க காரணம், எந்த கோப்பை ஜெயிச்சாலும் அத முதல்ல அந்த அணியோட இளம் வீரருக்கு கொடுக்குறது, அணியோட வெற்றி அப்போ பின் நின்னு அணிய முன்னிறுத்தி, தோல்வி வரும்போது அணிக்கு முன்ன நின்னு பேசி, வெற்றிய இலக்கா வைக்காம, அந்த Process-அ மட்டும் follow பண்ணுங்க-னு செஞ்சு காமிச்சு சொல்லவும் செஞ்சாரு.
இப்படி பல இடங்கள்-ல வாழ்க்கைய கற்றுக் கொடுத்த Thala எப்பவும் நம்ம வாழ்க்கையில ஒரு முக்கியமான கொண்டாட்டமா என்னைக்கும் இருப்பாரு. Thala for a Reason. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல.