Cinema News Interview Stories

வாகை சூடவா படத்தின் வாய்ப்பு இனியாவுக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?

நடிகை இனியா சமீபத்தில் கொடுத்த சூரியன் FM நேர்காணலில் நிறைய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவரிடம் நீங்கள் சிறு வயதிலேயே தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கு கொண்டதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். நீங்கள் என்றாவது ஒரு கதாநாயகி ஆவேன் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “எல்லாரும் சொல்ற மாதிரி நான் சினிமாக்கு வருவேன்னு நினைச்சு பாத்ததே இல்ல அப்படினுலாம் சொல்லமாட்டேன். எனக்கு ஆசை இருந்தது.

மேலும் நடிப்பதை விட டான்ஸ்ல தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டதை அடுத்து எனது அம்மாவின் தொலைபேசிக்கு ஒரு இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘வாகை சூடவா’ படத்தில் நடிப்பதற்கான ஆஃபர் அது.

இப்படியாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 2011 ஆம் ஆண்டு வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானேன்” என்று பதிலளித்தார். மேலும் அவர் வாகை சூடவா படம் குறித்த நிறைய அனுபவங்களை மிகவும் நுணுக்கமாக நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By Jothika