நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து ஏழுமலையானை தரிசனம் செய்து வந்துள்ளார் தனுஷ். உடன் அவரது மகன்கள் இருவரும் வந்துள்ளனர். அனைவரும் சாமியை தரிசனம் செய்து மொட்டையடித்துள்ளனர். நீண்ட நாட்களாக கேப்டன் மில்லர் லுக்கில் வலம் வந்த தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தின் தோற்றத்திற்கு விடுதலை கொடுத்துள்ளார்.

தற்போது மொட்டை அடித்துள்ள தனுஷின் புதிய லுக் என அவரது திருப்பதி புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இது கேப்டன் மில்லருக்கான மற்றொரு தோற்றமா? இல்லை அடுத்த படத்திற்கான தோற்றமா என்பது இனி தான் தெரிய வரும்.